சமூக நீதி - மாற்றம் பெற மாற வேண்டும் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.02.2024

சமூக நீதி - மாற்றம் பெற மாற வேண்டும் | ஞா சிங்கராயர் சாமி.                                

சீருடைகள் மாற்றம்
தலைபாரம் ஏற்றம்
வறுமை குற்றம்
கொடுமை சுற்றம் 
பரிதாப தோற்றம்
படிக்காத சீற்றம் 

நடையில் ஓட்டம் 
குடும்பம் ஆட்டம் 
முகத்தில் வாட்டம் 
கோபத்தில் காட்டம் 
புகைவண்டி கட்டம்
வாழ்க்கை வட்டம் 

மனிதநேயம் வேண்டும்
உரியகூலி வேண்டும் 
சமூகநீதி வேண்டும்
மரியாதை வேண்டும்
மதிப்பு வேண்டும் 
கணிவு வேண்டும்
கண்ணியம் வேண்டும் 

வெறுப்பு வேண்டாம் 
கேள்விகள் வேண்டாம்
கேலிகள் வேண்டாம் 
மட்டம் தட்ட வேண்டாம் 
ஏற்ற தாழ்வு வேண்டாம்
கெடுபிடி வேண்டாம்
தரக்குறைவு வேண்டாம் 

சாமானியன்.                                                  
ஞா சிங்கராயர் சாமி.                                
கோவில்பட்டி