கடவுள் அன்பாய் இருக்கிறார்... | Selvi Mary| VeritasTamil


நிலையான அன்பு இயேசுவின் அன்பு! இதயத்தின் அன்பினால் ஏற்றப்படும் ஒவ்வொரு அகல் விளக்கும் தெய்வீக மகிழ்ச்சியைத் தரும் என்று கூறினால் அது மிகையாகாது. அன்புதான் உயிர்களை இணைக்கும் சக்தியாக இருக்கிறது.

"அன்பு இல்லையேல் நானொன்றுமில்லை" என்பார் தூய பவுல். "கடவுள் உங்களிடம் அன்பு செலுத்தியது போல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்ற இறைவார்த்தைக்கேற்ப நம்மால் வாழ முடிகிறதா?

உண்மையான அன்பு எது?

இன்று நாம் வாழ்கின்ற வாழ்க்கையில் அன்பைத் தொலைத்து விட்டு, பொன்னைத் தேடுவதிலும், பொருளைத் தேடுவதிலும், மண்ணைத் தேடுவதிலும் நமது நேரத்தைச் செலவு செய்கின்றோமே தவிர, மனிதநேயத்தைத் தேடுவதில்லை. புகழ், பணம், பட்டம், பதவி, ஆடம்பரம் இவைகளைத்தான் நாடித் தேடுகிறோம். இதுவா உண்மையான அன்பு?

மனம் வருந்தி கடவுள் வழி திரும்புவோம். அலகையின் அடிமையாய் இருப்பது ஆண்டவருக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதை நம்முடைய உள்ளத்தில் இருத்துவோம்.

உடல், உள்ள, ஆன்மா நலன் பெற வேண்டும் என்றால் இயேசுவிடம், இறைப்பற்று, நம்பிக்கைக் கொள்ள வேண்டும். அவரிடம் நம்பிக்கைக் கொள்ளாத ஒருவர் நலமான வாழ்வினைபெற முடியாமல் போவது மட்டுமல்லாமல், அவர் கடவுளுக்கு உகந்தவராக வாழவும் முடியாது. (எபி 11:6).

அன்பே உருவான இயேசுவுக்கு மிகவும் பிரியமானது நல்லுறவே. இயேசு யோவான் 17:11 இல் "தூய தந்தையே, அதிகமாக, நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் கொள்ளும் இருப்பார்களாக" என்கின்றார். “இறைப்பற்றுள்ளோரிடம். ம் கடந்து ஆண்டவரின் கொடைகள் நிலைத்து நிற்கும். அவரது பரிவு என்றும் வெற்றியைக் கொணரும்" (சீஞா 11:7).

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! பாவ, பலவீன, தீமைகளைக் களைந்துவிட்டு, இயேசு கிறிஸ்துவை ஆடையாக அணிந்து கொண்டு, அன்பால் நம் ஆன்மாவை அலங்கரிப்போம். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது அழியாத அன்பு கொண்டிருக்கும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக...!

- செல்வி மேரி 

 

இது 'இருக்கிறவர் நாமே' என்ற மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது.

 

 

Add new comment

14 + 6 =