யதாா்த்தம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 31.01.2025
எதார்த்தம்
காலம்
யாருக்காகவும், யாரும்
காத்திருப்பதில்லை.
எவருக்காகவும், காலம்
நின்று விடுவதில்லை.
விரும்பியது அமையாவிடில்
அமைந்ததை விரும்பு.
தேவை கடலளவு, கிடைப்பது கையளவா? கையையே கடலாக நினைத்துக் கொள்.
கண்கள் குருடாகலாம்.
ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும்,
என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.
எதனால் அளக்கிறோமோ
அதனால் தான் நாமும்
அளக்கப் படுகிறோம்.
கட்டிக் கொடுத்த உணவும்,
சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.
அறிவுக்கோ, விவாதங்களுக்கோ
எட்டாதது ஞானம்.
தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொள்.
தெரிந்ததாக வேடம் போடாதே.
சகிப்புத் தன்மையே
ஞானத்தின் திறவுகோல்.
சகிப்புத் தன்மை இல்லாத
ஞானம் வெறும் அறிவின் அகந்தை.
அறியாமை அன்பு செலுத்தும்.
அறிவு ஆதிக்கம் செலுத்தும்.
பல இடங்களில் அறிவை விட
அறியாமையே போற்றப்படுகிறது.
இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்' என்னும் போது,
அங்கே 'நான்' என்பதே
பிரம்மாண்டமாக நிற்கிறது.
மௌனம் தன்னை மௌனம் என்று
எப்போதும் சொல்வதில்லை.
காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும்.
தனி மனித விமர்சனங்கள் என்பது
அவரவர் கண்ணோட்டமே.
இதுவே வாழ்வியல்!
புரிந்தால் நலமே!!
வாழ்க வளத்துடன்! நலத்துடன்!!
இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எம் மக்களுக்கு நற்ச்சிந்தனையும் நல்லோழுக்கமும் சகிப்புத்தன்மையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி