ஒப்பீடு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.03.2025

சிலரோடு ஒப்பிடும் போது
தோல்வியடைந்திருக்கிறாய்!
சிலரோடு ஒப்பிடும் போது வெற்றி
யடைந்திருக்கிறாய்
எவரோடும் ஒப்பிடாத போது மகிழ்ச்சியடைந்திருக்கிறாய்.
நிரந்தரமாக
இதுவே நிதர்சனமான உண்மை.
ஆகா அவரை விட நான் வெற்றியடைந்தேன்
என ஆனந்த மகிழ்ச்சி
அவரை விட ஓராயிரம் ரன் கூட எடுத்து விட்டேன்
அவரை விட ஒரு கோடி கூட சம்பாதித்துவிட்டேன்.
அவரை விட ஒரு பெரிய வீடு
கட்டி விட்டேன்
வானில் பறக்குது இந்த பலூன்
அடுத்த நொடியே அடுத்தவரை பார்த்தவுடன் அய்யய்யோ இவரை விட நான் கம்மி.
இவரை விட நான் ஏழை
என்ற நினைப்பு பிழைப்பை கெடுத்து விடுகிறது
இந்த ஒப்பிடுதல்
ஒரு நோய்
தீராத ஒரு புற்று நோய்
உள்ளிருந்து வளர்ந்து
உயிர் கெடுக்கும்
உள்ளத்தில் வளர்ந்து
நிம்மதி கெடுக்கும்
நடைமுறையில் நமது பயணங்கள் பல அவசரமாக நடக்கின்றன
நமது முடிவுகள் எல்லாம் ஆத்திரத்தில் விளைகின்றன.
அமைதியின்மையும் பொறுமையின்மையும் நமது உடன் பிறந்த சகோதரர்கள்
ஒப்பிடுதலும் பொறாமையும்
ஒட்டி பிறந்த மச்சங்கள்
அடுத்தவரை பார்த்து ஒப்பிடுதல்தான் முதல் சைத்தானின் ஆக்ரமிப்பு.
முதலாளித்துவ சமூகத்தில் நூறு கோடியாளரின் வாழ்க்கை தரமும்
நூறு கோடி அடுக்குகளாக அமைந்து விடுகின்றன.
அடி மட்டத்தில் ஒருவனது
சராசரி வருமானம்
அய்ம்பது ரூபாயாககூட
உள்ளது சிலருக்கு
அந்தக் கோடு கூட அடைய முடியாத அவல நிலை.
இன்னொரு பக்கம் முதலாவது இடத்தில் உள்ள செல்வரின் ஒரு நொடிவருமானம் கூட பல ஆயிரம் கோடி என்று கணக்கு சொல்லப்படுகிறது
சொல்லாமல் இருப்பது
தெரியாத நமக்கு தெரியாது.
விரலுக்கு தகுந்த
வீக்கம் என்பார்
சிலர் விரல்
மோதிரத்தால் வீங்க
பலர் விரல் வியாதியால் வீங்கி கிடக்கிறது.
அவரவர் வரவுக்கு தக்க வாழ்க்கை தரம் மாறுபடுகிறது.
சிலர் பாலுக்கு
சீனியில்லையென அழ
பலர் கூலுக்கு
உப்பில்லையென ஏங்க
இந்த ஒப்பிடுதல் பல கோடி உள்ளங்களில் உறங்கி கிடக்கிறது
இதன் விளைவாக வரும் சோகமும்
தாழ்வு மனப்பான்மையும்
பொறாமையாக உருவம் கொள்கிறது.
இந்த உணர்வுகள் ஆத்திரத்தை தூண்டுகின்றன
அவசரத்தை தாண்டுகின்றன
அமைதின்மையும் பொறுமையின்மையும் வன்முறையாகின்றன.
அமைதியின் தார்ப்பரியத்தில்
இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எம் மக்களுக்கு அமைதியும் ஒற்றுமையும் நற்ச்சிந்தனையும் கிடைக்கவும் எம் திருத்தந்தை பிரான்சிசு அவர்களுக்கு உடல் உள்ள சுகத்துடன் நெடுவாழ்வு வாழவும் நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
