உலக மறைபரப்பு ஞாயிறுக் கொண்டாட்டத்திற்குத் திருத்தந்தை அழைப்பு!| Veritas Tamil

வத்திக்கான் நகரம் ஆண்டுதோறும்  அக்டோபர் மாதம் உலக மறைபரப்பு ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் அக்டோபர் 19-ஆம் தேதி, "மக்களிடையே நம்பிக்கையின் மறைப்பணியாளர்கள்" என்ற கருப்பொருளில் இந்நாள் சிறப்பிக்கப்படவுள்ளது.
அன்று, ஒட்டுமொத்தத் திரு அவையும் ஒன்றுபட்டு குறிப்பாக, மறைபரப்புப் பணியாளர்களுக்காகவும்,அவர்களின் திருத்தூதுப்பணியின் பலனுக்காகவும், செபிப்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை லியோ  "உலகில் உள்ள ஒவ்வொரு கத்தோலிக்கப் பங்கும் உலக மறைபரப்பு ஞாயிற்றுக்கிழமையில் பங்கேற்கவேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மறைபரப்புப் பணியும் நன்றியும் நமது திருமுழுக்கின் போது நமக்கு தரப்பட்ட அழைப்பை வலியுறுத்தி திருத்தந்தை லியோ கூறும் பொழுது "வரும் அக்டோபர் 19 அன்று நமது திருமுழுக்கின் போது நமக்கு கொடுக்கப்பட்ட, 'உலக மக்களிடம் நம்பிக்கையை பரப்பும் பணியாளர்களாக' என்ற அழைப்புக்கு இணங்க, உலகின் கடை எல்லை வரை இயேசு கிறிஸ்து என்னும் நம்பிக்கையை கொண்டு சேர்க்கும் இனிமையான, மகிழ்ச்சியான, பணியை செய்ய நம்மையே மீண்டும் அர்ப்பணிப்போம்' என்றார்.

 

"உலகில் உள்ள ஒவ்வொரு கத்தோலிக்கப் பங்கும் உலக மறைபரப்பு ஞாயிற்றுக்கிழமையில் பங்கேற்கவேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


ஒவ்வொருவருடைய செபமும் ஆதரவும் நற்செய்தியைப் பரப்ப உதவும், மேய்ப்புப் பணித் திட்டங்களை வழங்க உதவும், புதிய ஆலயங்களைக் கட்ட உதவும் மற்றும் மறைபரப்பு நாடுகளில் உள்ள நமது சகோதர, சகோதரிகளின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகளைப் பராமரிக்கவும் பேருதவியாக இருக்கும் எனத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும், "நம் நம்பிக்கையான கிறிஸ்து இயேசுவைப் பூமியின் கடைசி வரை கொண்டுசெல்லும் இனிமையான மற்றும் மகிழ்ச்சியான பணியில் நம்மையே நாம் மீண்டும் அர்ப்பணிக்கவேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக , பேராலயங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, தனது  ஆசீர்வாதத்தை வழங்கினார். இதன் மூலம், மிஷனரி பணிகளில் திருச்சபையின் உலகளாவிய அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் .

Daily Program

Livesteam thumbnail