யூபிலி 2025ஆம் ஆண்டு நிறைவு மதுவிலக்கு பேரணி | Veritas Tamil

கத்தோலிக்க திருவையானது உலகம் முழுவதும் கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி வரை இயேசு பிறந்த 2025 யூபிலி ஆண்டாக அறிவித்துக் கொண்டாடுகிறது. இந்த யூபிலி ஆண்டில் அந்தந்த மறைமாவட்டம் செய்து வருகின்ற நன்மையான பணிகளை இறைவனுக்கு அர்ப்பணித்து நன்றி செலுத்தவும் இன்னும் தேவையில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கவும் அழைப்பு விடுத்தது.  ஏற்கனவே அக்டோபர் 2 தூத்துக்குடி மறைவுமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி தலைமையில் பரிசுத்த பனிமய மாதா பேராலயத்தில் குடிநோயாளர்களுக்காக சிறப்பு வேண்டுதல் மற்றும் நன்றி யூபிலி திருப்பலி நடைபெற்றது. வரலாற்றில் புனித பிரான்சிஸ் சவேரியார் 16.06.1544 மணப்பாட்டில் இருந்து புன்னக்காயலில் இருந்த தனது உதவியாளர் அருள்பணி மன்சிலாஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் மக்களை குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற  வேண்டுகோள் விடுத்தார்கள்.  

அதன் முத்தாய்ப்பாக மீண்டும் தூத்துக்குடி மறைமாவட்டம் பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதைநோய் நலப்பணிக்குழு மற்றும் மணப்பாடு பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபையோடு இணைந்து, பங்குத் தந்தையர்கள் ஒருங்கினைப்பில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று சரியாக மாலை 4 மணி அளவில் மதுவிலக்கு விழிப்புணர்வு பேரணியானது மணப்பாடு தூய யாகப்பர் ஆலயம் தொடங்கி  தூயஆவியார் ஆலயம் வழியாக கடற்கரை சென்றடைந்து அங்கிருந்து புனித திருச்சிலுவை உயர் திருத்தலத்திலத்திற்கு பவனியாக சென்று திருப்பலி நடைபெற்றது. 
திருப்பலியில் பல்வேறு குடிநோய் மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நலமடைந்த குடும்பங்களுக்கு நன்றி செலுத்தவும், மேலும் குடி நோயால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களுக்காக ஜெபிக்கவும், சிறப்பாக வளர்வாழ் மாணவர்கள், இளைஞர்களை ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவும் சிறப்பு நன்றி மற்றும் வேண்டுதல் செய்யப்பட்டது. இந்த திருப்பலியை தலைமையேற்று நடத்தியவர்கள் அருள்பணி ஜெயந்தன் டி கிரேஸ், இயக்குநர், பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதைநோய் நலப்பணிக்குழு,  மணப்பாடு உயர்திருத்தல அதிபர் அருள்பணி மைக்கேல் க்ராசியுஸ், மணப்பாடு தூய ஆவியார் பங்குத்தந்தை அருள்பணி ஜெய்கர், புனித பிரான்சிஸ் சவேரியார் மரைன் நிறுவனஇனை இயக்குநர் அருள்பணி மனோ மற்றும் மணப்பாடு திருத்தொண்டர் மனோஜ் மறையுரை கொடுத்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபை தலைவர் திரு. ரூஸ்வெல்ட், அருள்சகோதரர் ரஷ்யன், மணப்பாடு ஆசியர்கள் திரு. வலன்டின் இளங்கோ, திரு. சிலுவை அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலங்கள் என்பதால் மணப்பாடு மக்களோடு பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு யூபிலி ஆசீர் பெற்று சென்றார்கள்.