காலநிலை | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

காலநிலை 
மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று.
மழை நாட்கள், மேகமூட்டமான நாட்கள், 
பனி பொழியும் நாட்கள், 
வெயில் நாட்கள் என மனித வாழ்விலும் எத்தனை விதமான மாறுபட்ட நாட்கள்!

ஒவ்வொரு காலநிலையையும் விரும்புவோரும்  உண்டு; வெறுப்போரும் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அது தன்னை மாற்றிக் கொள்வது இல்லை; மனிதர்கள்தான் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்! 

மோசமான காலநிலை என்று எதுவும் இல்லை; எல்லாமே வெவ்வேறு விதமான நல்ல காலநிலைதான். மனிதர்களும் அப்படித்தான்.  எல்லோருக்கும் மோசமானவர்கள் என்று யாருமே இல்லை!

இயற்கையில் எதுவுமே ஆண்டு முழுவதும் ஒரே மாதிரி நீடிப்பதில்லை. மனிதர்களும் அப்படியே என ஏற்றுக்கொண்டால் வாழ்வில் ஏமாற்றமில்லை!

காலநிலை பற்றி க் கவலைப்படுவோர் உண்டு; 
விமர்சனம் செய்வோரும் உண்டு; 
ஆனால், அதைச் சரி செய்ய அக்கறை காட்டுவோர் எவரே?
அதற்காக முயற்சி எடுப்போரைப் பாராட்டுவோர் எவரே?!

காலநிலையைக் கருத்துடன் காத்து, எதிர் வரும் சந்ததிக்கு ஏற்றமிகு வாழ்வைப் பரிசளிப்பது 
நம் தலையாயக் கடமையெனக் கொள்வோம்!

வாழ்க வளமுடன் நலமுடன் 🌷💐🌹🌷💐🌹🌷💐🌹

எழுத்து 

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி.