வீடுகள், பள்ளிகள் மற்றும் பங்குகளில் அமைக்கப்படும் பிறப்புக் காட்சிகளின் முன் சிந்திக்குமாறு இளைஞர்களை அழைத்த திருத்தந்தை, கிறிஸ்துவைச் சுற்றி அனைவருக்கும் இடம் இருப்பதை அவை வெளிப்படுத்துகின்றன என்றார்.
ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு நபரும் இன்றைய உலகில் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க கடவுளால் அழைக்கப்பட்டதாக உணருவது எவ்வளவு முக்கியம்" என்று திருத்தந்தை கூறினார்.
மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் வசந்த காலம் அதாவது மலர்கள் பூத்துக் குலுங்கும் மாதம். இந்த வசந்த காலத்தில் மகப்பேறுக்கு மதிப்பளிக்கும்வண்ணம் நாம் "அன்னையர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அதேவேளையில் பெண்களுக்குள் பேறு பெற்றவளும் இறைவனின் தாயுமான அன்னை மரியாளுக்கு இந்த மே மாதத்தை அர்ப்பணித்துச் சிறப்பிக்கவும் கிறிஸ்தவர்கள் விரும்பினார்கள்.