இறைமக்களுக்குக் கடவுளின் நம்பிக்கை, உடனிருப்பு இருப்பினும், நற்செய்தி ஒரு ஆழ்ந்த உண்மையைப் பதிய வைக்கிறது. நமது மீட்புக்கான பாதையில் துன்பமும் துயரமும், மகிழ்ச்சியும் கலந்திருக்கும் .
இது வெள்ளி மற்றும் தங்கத்தால் கட்டிடத்தை அலங்கரிப்பதால் அல்ல, மாறாக, கடவுளால் அருள்பொழிவு செய்யப்பட்ட மெசியாவை இந்த ஆலயத்திற்கு அனுப்பவுள்ளார் என்ற செய்தியை முன்னறிவிக்கிறார்.
இயேசு குடும்ப உறவு என்ற கருத்தை உயிரியல் (biological) உறவுகளிலிருந்து (அவரது தாய், சகோதரர்கள்) நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலில் வேரூன்றியவர்களுக்கு மாற்றுகிறார்: கடவுளுடைய வார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது; அதன்படி செயல்படுவதே (அதை வாழ்ந்து காட்டுவது) ஒருவரை உண்மையான இறை குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறுகிறது எனும் கருத்தை வலியுறுத்துகிறார்.