திரைப்படங்கள் செயல்பாட்டிற்கு நம்பிக்கையை விதைக்கவேண்டும்'-திருத்தந்தை வலியுறுத்தல் ! | Veritas Tamil
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் யூபிலி ஆண்டில் வாத்திக்கானுக்கு வருகைத் தந்த நடிகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களைச் சந்தித்தபோது, "அவர்கள் அனைவரும் நம்பிக்கையின் திருப்பயணிகள் என்றும், அவர்கள் இன்றைய உலகில் நம்பிக்கை, அழகு மற்றும் உண்மையின் சாட்சிகளாக இருக்க வேண்டுமென்றும்" கேட்டுக்கொண்டார்.
"திரைப்படங்கள் படங்கள், வார்த்தைகள், உணர்ச்சிகள், பகிரப்பட்ட நினைவுகள் மற்றும் கூட்டு ஆசைகளில் அளவிடப்படுகிறது" என்று குறிப்பிட்ட திருத்தந்தை, நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைப்படத்
தயாரிப்பாளர்களின் பணிக்கு திரு அவையின் பாராட்டுகளைப் பிரதிபலிக்கும் வகையில், திரு அவைக்கும் சினிமாவுக்கும் இடையிலான நட்பைப் புதுப்பிக்க தாம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளர்.
"காட்சி விளைவுகளால் பார்வையாளர்களைக் கவருவதிலிருந்து விலகி, திரைப்படம் -வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவும் புரிந்துகொள்ளவும். அதன் மகத்துவத்தையும் பலவீனத்தையும் விவரிக்கவும், முடிவுக்கான ஏக்கத்தைச் சித்தரிக்கவும் விரும்பும் விருப்பத்தின் வெளிப்பாடாக மாறியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, "மிகவும் சிறப்பான கலை, வெறும் பொழுதுபோக்காக மட்டும் அமைந்து விடாமல், மக்களின் அனைவரும் சிறப்பான நோக்கத்துடன் அணுகக்கூடியது: இது கேட்டுக்கொண்டார்.
இறுதியாக ,ஆன்மிகப் பயணத்தில் ஒரு நீட்சியாக அமையவேண்டுமென்றும்"
மனிதகுலத்திற்கு சினிமாவின் பங்களிப்பு மிகப்பெரியது என்று குறிப்பிட்ட அவர், இது பார்வையாளர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பரிசீலிக்கவும், தங்கள் அனுபவங்களின் சிக்கலான தன்மையைப் புதிய கண்களால் பார்க்கவும், உலகை முதல் முறையாகப் பார்க்கவும் உதவிடவேண்டும்; இந்தச் சுயபரிசோதனை. ஒருவர் தன் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு அவசியமான நம்பிக்கையின் ஒரு பகுதியை மீண்டும் கண்டுபிடிக்க மக்களை ஊக்குவிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்