மாபெரும் எதிர்நோக்கின் திருப்பயணிகள் நிகழ்வு !| Veritas Tamil
மாபெரும் எதிர்நோக்கின் திருப்பயணிகள் நிகழ்வு நிகழ்வில் செயிண்ட் அன்னா சிற்றாலயத்தில் திருப்பலி நடத்தும் கார்டினல் டாக்ளே
கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டாக்ளே நவம்பர் 29, 2025 அன்று செயிண்ட் அன்னா சிறிய பசிலிக்காவில் நடைபெறும் பொதுப் புனித திருப்பயண திருப்பலியை நடத்துகிறார்; ஆஸ்திரேலியாவை சேர்ந்த பா. ராப் காளேயா வழங்கும் கச்சேரியும் இதனுடன் நடைபெற உள்ளது.
பெனாங்கில் நவம்பர் 27–30 வரை நடைபெற உள்ள மாபெரும் எதிர்நோக்கின் திருப்பயணத்தின் ஒரு பகுதியாக, வத்திக்கானின் அறிவுரையாளர் துறையின் (Dicastery for Evangelization) துணைத் தலைவராக இருக்கும் கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டாக்ளே, நவம்பர் 29 அன்று புக்கிட் மெர்டாஜாமில் உள்ள செயிண்ட் அன்னா சிறிய பசிலிக்காவில் ஒரு சிறப்பு திருப்பலியை நடத்த உள்ளார். இந்த திருப்பலியும், பா. ராப் காளேயாவின் கச்சேரியும், பசிலிக்கா வளாகத்தில் நடைபெறவுள்ள மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட இரண்டு நிகழ்வுகள்.
உலகளாவிய கத்தோலிக்க திருஅவையின் முக்கிய குரல்களில் ஒருவரான கார்டினல் டாக்ளே நடத்தும் இந்த திருப்பலி, மலேசியாவிலும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான திருப்பணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கிட் மெர்டாஜாமில் உள்ள செயிண்ட் அன்னா ஆலயம், தற்போது சிறிய பசிலிக்கா என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது. இது மலேசியாவின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான திருப்பயண மையங்களில் ஒன்றாகும்.
அன்னையின் தாய் புனித அன்னாவைப் பற்றிய பக்தி, சீன மற்றும் இந்திய கத்தோலிக்க குடும்பங்களில் ஆழமாக வேரூன்றியது. அவர்கள் குணமடைதல், குடும்ப வாழ்க்கை, வளம், பாதுகாப்பு மற்றும் நெருக்கடிக் காலங்களில் நன்றி செலுத்துதல் போன்ற நலன்களுக்காக அவரின் துணை வேண்டினர்.
ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26 ஆம் தேதி கொண்டாடப்படும் புனித அன்னா திருநாளுக்கு, ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் புக்கிட் மெர்டாஜாமுக்கு வருகை தருகிறார்கள். அப்போது வழக்கமாக அமைதியாக இருக்கும் நகரம் ஆன்மீக உற்சாகத்தால் நிரம்பி வழிகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறும் நவநாளை பிரார்த்தனைகள், மெழுகுவர்த்தி ஊர்வலங்கள், குணமளிக்கும் ஆராதனைகள் மற்றும் பேரணிகளில், மலேசியாவின் பல பகுதிகள் மட்டுமின்றி சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.
அவர்களில் பலர், மனப்பணிகளை நிறைவேற்றவும், நன்றியை வெளிப்படுத்தவும் அல்லது தனிப்பட்ட போராட்டங்களுக்கிடையில் வலிமை தேடவும் வருகிறார்கள்.
பசிலிக்கா வளாகம், பழைய தேவாலயம் மற்றும் 19ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம், பல மொழிகள், கலாச்சாரங்கள், மரபுகள், தலைமுறைகள் இணைந்த ஆன்மிகப் பண்பாட்டால் நிறைந்து விடுகிறது.
இங்கு முதல் நிரந்தர தேவாலயம் 1888 ஆம் ஆண்டு கட்டப்பட்டது; பின்னர் 1958 இல் பழைய பெரிய தேவாலயம் முடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அதிகரிக்கும் திருப்பணிகளை ஏற்றுக்கொள்ள, தற்போதைய பசிலிக்கா வளாகம் 2000களின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. 2019 ஆம் ஆண்டு, இதன் வரலாற்று மரபும், மிஷனரி பணியின் வேரிழையும், மலேசிய கத்தோலிக்கர்களுக்கான ஆன்மீக முக்கியத்துவமும் காரணமாக, வத்திக்கான் இதனை சிறிய பசிலிக்கா என்ற அந்தஸ்த்துக்கு உயர்த்தியது.
மாபெரும் எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஆசிய கத்தோலிக்க சபைக்கு ஒரு மகத்தான தருணத்தில் வருகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த சந்திப்பில், ஆசியா முழுவதும் உள்ள மறைமாவட்டத் தலைவர்கள், குருக்கள், துறவிகள், மற்றும் திருப்பணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் சிந்தனை, கலந்துரையாடல் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.
ஆசிய ஆயர்கள் மாநாட்டின் பரப்புரை அலுவலகம் (FABC-OE) இந்த திருப்பயண நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இது கத்தோலிக்க அடையாளத்தை நிலைநிறுத்திக்கொண்டு, ஆசியாவின் செறிந்த கலாச்சார மற்றும் ஆன்மீக பல்வகைபாட்டுடன் இணைந்து முன்னேறுவதற்கான புதிய வழிகளை ஆராய முயல்கிறது. கூட்டு உரையாடல்கள் மற்றும் அறிவு பகிர்வுகளின் மூலம், ஆசிய சபையின் எதிர்கால நோக்கத்தை உருவாக்குவதே இதன் குறிக்கோள்.
செயிண்ட் அன்னாவில் நடைபெறும் கார்டினல் டாக்ளே அவர்களின் திருப்பலி, மலேசிய சபையின் ஆழமான வரலாற்று வேர்களை, புதுப்பிப்பு மற்றும் ஒன்றுமையை நோக்கி முன்னேறும் ஆசிய கண்டத்தின் நம்பிக்கைகளுடன் இணைக்கும் ஒரு சின்னமாகும்.
இந்த திருப்பலியும் கச்சேரியும், நவம்பர் 29 அன்று மாலை 5.30 மணி முதல் ரேடியோ வேரித்தாஸ் ஏசியாவின் Facebook மற்றும் YouTube தளங்களில் (@VeritasAsia) நேரலையில் ஒளிபரப்பப்படும்.