கடவுளின் திருவுளத்திற்குப் பணிவது உண்மை நோன்பு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
19 ஜனவரி 2026
பொதுக்காலம் இரண்டாம் வாரம் – திங்கள்
1 சாமுவேல் 15: 16-23
மாற்கு 2: 18-22
கடவுளின் திருவுளத்திற்குப் பணிவது உண்மை நோன்பு!
முதல் வாசகம்.
அவரது வாசகத்தில் அரசர் சவுல் மற்றும் அறைவக்கினர் சாமுவேலின் கதையிலிருந்து வருகிறது. முந்தைய காலங்களில் இஸ்ரயேலருக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பின் காரணமாக அமலேக்கியர்களைத் தாக்கி அவர்களை முற்றிலுமாக அழிக்கும்படி கடவுள் சவுலுக்குக் கட்டளையிட்டிருந்தார். அதற்கு பதிலாக, சவுல் கடவுளின் கட்டளையை மீறுகிறார்: அவர் அமலேக்கியரை அழித்து அவர்களின் அரசரான ஆகாகை விட்டுவிட்டு, சில சிறந்த கால்நடைகளை அபகரித்திருந்தார். சவுல் கடவுளால் அருள்பொழிவுச செய்யப்பட்ட அரசராக கடவிளின கட்டளைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையைச் சாமுவேல் சுட்டிக்காட்டுகிறார். சவுல் அமலேக்கியரின் அரசரான ஆகாகை கடவுளின் கட்டளைப்படி கொல்லாதது சாமுவலுவின் பார்வையில் கடவுளின் கட்டளையை மீறியதாகக் கொள்ளப்பட்டது.
சவுல் கடவுளின் கட்டளையை நிராகரித்ததால், கடவுள் அவரை அரசராக நிராகரித்துவிட்டார் என்று சாமுவேல் அறிவிக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்ததை முன்வைத்து, சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்று கேட்டனர்.
இக்கேள்விக்கு, இயேசு இரண்டு உருவகங்களுடன் பதிலளிக்கிறார்:
1 திருமண விருந்து மற்றும் மணமகன்
அவர் ஒரு திருமண மணமகனுடன் தன்னை ஒப்பிட்டு விளக்குகிறார்.
வழக்கத்தில் மணமகன் உடன் இருக்கும்போது, விருந்துபசரிப்பு நிறைந்திருக்கும். அத்தருணத்தில் திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எவரும் நோன்பு இருப்பதில்லை அல்லவா? இச்சூழலை முன்வைத்து, அது மகிழ்ச்சியின் காலம், நோன்பு தேவையற்றது என்று விளக்குகிறார் இயேசு.
ஆனால் "மணமகன் பிரிந்ந்து போகும் காலம் வரும்" – அப்போது நோன்பு இருப்பார்கள் என்றும் என்று, அவரது எதிர்கால துன்பம், மரணம் குறித்த பிரிவை இயேசு முன்னறிவிக்கிறார்.
பின்னர் இயேசு இரண்டு சிறிய உவமைகளைப் பயன்படுத்துகிறார்:
யாரும் ஒரு பழைய ஆடையில் புதிய துணியின் துண்டை ஒட்டுவதில்லை - புதிய துணி பழைய துணியுடன் பொருந்தாததால் அது கிழிந்துவிடும் என்கிறார். மேலும்,
யாரும் புதிய மதுவை பழைய திராட்சை மதுவில் ஊற்றுவதில்லை - புதிய மது விரிவடைந்து பழைய திராட்சை மதுவை வெடிக்கச் செய்யும், அதனால் மதுவும் தோல் பைகளும் கெட்டுவிடும். அதற்கு பதிலாக, புதிய மதுவை புதிய திராட்சை மதுவில் ஊற்ற வேண்டும் என்று மற்றொரு விளக்கத்தைக் கொடுக்கிறார்.
சிந்தனைக்கு.
கடவுள் நம்மை அவருடைய வழிகளை முழுமையாகப் புரிந்து அதன்படி அவரை முழுமையாக நம்பி கீழ்ப்படிய அழைக்கிறார். ஆம் சீடத்துவம் என்பது அவரில், அவரது திருவுளத்திற்குக் கீழப்படிந்து வாழ்வதாகும். சவுல் கடவுளின் திருவுளத்தை மீறுகிறார். அவரது எண்ணத்தின் படி செயல்பட்டதை சாமுவேல் சுட்டிக்காட்டினார்.
கடவுள் வெளிப்படையாகக் கட்டளையிடுவதை நாம் நிராகரித்தால், பாதிப்பு நமக்குத்தான். எனவேதான், கடவுள் வெளிப்புற சமயச் சடங்குகளை மட்டுமல்ல, இதயங்கள் அவருடைய திருவுளத்திற்கு இசைவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். பழைய விலங்குகள் பலியை அவர் நிராகரிக்கிறார்.
கடவுளின் உடனிருப்பு நம்மில் புத்துணர்வையும் மகிழ்ச்சியையும் தரவல்லது. நமது பழைய எண்ணங்கள், தீர்மானங்கள், வெற்றி தோல்வி இவற்றில் நம்மை புதைத்துக்கொண்டு இனி வாழ்வே இல்லை போன்ற முடிவுகளுக்கு வருதல் கூடாது. ஒவ்வொரு நிமிடமும் கடவுளுடையது. அவர் அவற்றை நமக்குப் புதுபிப்பார்.
திருஅவையின் போதனையும் பணியும் பழையவற்றை பற்றிக்கொண்டிருப்பது அல்ல. மாறாக, அவர் கொண்டு வரும் புதிய வாழ்க்கையை ஏற்கக்கூடிய புதிய இதயங்களையும் புதிய கட்டமைப்புகளையும் நாம் பெற வேண்டும் என்பதாகும. பழையன கழிதிலும் புதியன புகுதலும் தொடர வேண்டும். மாறாக. ‘நான் பிடித்த முயலுக்கு மூன்ற கால்’ என்று பிடிவாதக் கொள்கையில் வாழ்ந்துகொண்டிருந்தால், பின் தள்ளப்படுவோம்.
இயேசுவில் நம்பிக்கை என்பது வெறுமனே பழைய கொள்கைகளைத் தொடர்வது பற்றியது அல்ல; அது அவர் கொண்டு வரும் தீவிரமான, தீர்க்கமான மாற்றத்தைத் தழுவுவதாகும். எடுத்துக்காடாக, நோனபு இருப்பதை ஒரு சுமையாக, கட்டாய சமயச் சடங்காக எண்ணாமல், தூய்மையில் வளரவும், மணமகனுடனான நமது உறவை ஆழப்படுத்தவும், அவர் நம்மை அனுப்பும் பணிக்கு முழுமையாக தயாராகவும் ஒரு மகிழ்ச்சியான வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில்தான் புனித பவுல், ‘இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் (உரோ 12:2) என்கிறார்
இறைவேண்டல்.
என் ஆண்டவரே, மணவாளரே, நீர் எனக்கு ஒப்படைத்தப் பணிக்கு உண்மையாக இருக்கவும், உலக மக்கள் பார்வைக்கு அல்ல, உமது பார்வையில் நான் சிறந்திருக்கவும் அருள்புரிவீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
+6 0122285452