இயற்கை | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

இறைவனின் ஈடு இணையற்ற இனிய கொடை.
இப்புவி வாழ் உயிர்களுக்கு இன்பத்தை வஞ்சனையின்றி வாரி வழங்கும் வள்ளல்!

இயற்கையை இரசிக்கக் கற்றுக் கொள்ளவில்லை யெனில், நீங்கள் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளவே இல்லை. நீங்கள் இயற்கையை நேசித்தால், எங்கும் எதிலும் எல்லோரிலும் அழகைக் காண்பீர்கள்!

இயற்கையின் வண்ணங்கள் உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும் ஏற்றமிகு எண்ணங்கள்.
இயற்கை கண்களுக்குக் குளிர்ச்சி; மனதுக்கு மகிழ்ச்சி; இதயத்துக்குக் கிளர்ச்சி; ஆன்மாவுக்கு அமைதி; உணர்வுகளுக்கு உந்து சக்தி!

இயற்கை அழகில் நீங்கள் திளைத்தால், ஆயிரமாயிரம் அதிசயங்களை கண்டு மகிழ்வீர்கள்.
இயற்கையில் உங்களைத் தொலைத்தால், உங்களை நீங்கள் உண்மையாகக் கண்டு கொள்வீர்கள்!

உங்கள் சிந்தை குளிர... அகம் மகிழ அற்புத மருந்து இயற்கை. 
மலர்கள் உங்கள் மனங்களை மயக்கும்; மரங்கள் உங்கள் எண்ணங்களை உயர்த்தும்; செடி கொடிகள் செழுமைநிறை வாழ்வை வாரி வழங்கும்!

இயற்கையின் இனிய இசை உங்களைத் தாலாட்டும்; வண்டுகளின் ரீங்காரம் உங்களைச் சீராட்டும்; பறவைகளின் பாடல் உங்களைப் பரவசமடையச் செய்யும்; நீர் அருவியின் ஓசை உங்களை நடனமாடச் செய்யும்.

வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐🌹🌹🌷🌷🤝🤝🥰🥰

 

எழுத்து 

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி.