எதிர்ப்பும் மறுப்பும் அற்ற சீடத்துவம் கிறிஸ்தவம் ஆகாது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
இன்றைய இறை உணவு
26 ஜனவரி 2026
பொதுக்காலம் 3-ஆம் வாரம் – திங்கள்
புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - ஆயர்கள் நினைவு
2 திமொ 1: 1-8
மாற்கு 3: 22-30
தூய ஆவியாரைப் பழித்துரைத்தல் தீயோனுக்குத் துதிபாடுதல்!
முதல் வாசகம்.
இந்த நாளில் திருஅவை புனித தீமோத்தேயு மற்றும் தீத்து ஆகியோரின் நினைவு நாளைக் கொண்டாடுகிறது, இவர்கள் புனித பவுலின் ஆயர்கள் மற்றும் தோழர்கள் ஆவர்.
இந்த வாசகத்தில், புனித பவுல் தனது இளம் தோழரான தீமோத்தேயுவுக்கு ஒரு தனிப்பட்ட, அன்பான கடிதத்தை எழுதுகிறார், அவரை அவர் "என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு," என்று தொடங்குகிறார். தீமோத்தேயுவுக்கு கடவுள் மற்றும் கிறிஸ்துவிடமிருந்து அருள், இரக்கம் மற்றும் அமைதி அடங்கிய வாழ்த்தினை பகர்கிறார்.
தீமோத்தேயுவின் உண்மையான நம்பக்கையை அவர் நினைவு கூர்ந்து, இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன் என்கிறார். மேலும் பவுல் தனது கைகளை வைத்ததன் மூலம் பெற்ற கடவுளின் கொடையை மீண்டும் தூண்டும்படி தீமோத்தேயுவை பவுல் ஊக்குவிக்கிறார் - இது தீமோத்தேயுவின் நியமனம் மற்றும் ஊழியத்திற்கான அழைப்பைக் குறிக்கிறது. கடவுள் நமக்கு பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை, மாறாக வல்லமை, அன்பு மற்றும் சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறார் என்பதை பவுல் அவருக்கு நினைவூட்டுகிறார. ஆண்டவரைப் பற்றிய சாட்சியத்தைப் பற்றியும், பவுலின் சிறைவாசத்தைப் பற்றியும் வெட்கப்படாமல், நற்செய்திக்காகப் பாடுகளில் துணிவுடனும் அர்ப்பணிப்புடனும் பங்கு கொள்ளும்படி தீமோத்தேயுவை அவர் வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
இந்தப் பகுதியில், எருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர் இயேசுவை எதிர்கொள்கிறார்கள். அவர்கள், அவர் பேய்களின் தலைவன் பெயல்செபூலால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார் என்று கதைக்கட்டினார்.
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “சாத்தான் எப்படி சாத்தானை விரட்ட முடியும்?” — தீயவன் தன்னைப் பிளவுப்படுத்திக் கொண்டிருந்தால் அவனுடைய அரசு நிலைத்திருக்க முடியாதே என்கிறார்.
அவர்களுக்கு மேலும் விளக்க ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். ஒரு திருடன் ஒரு வீட்டினுள் திருட நுழையும் முன், அவன் வீட்டின் பாதுகாப்பு அம்சங்களைக் கவனிக்கிறான். வீட்டு உரிமையாளரின் உடைமைகளை எடுத்துச் செல்ல முதலில் அவனை கட்டிப்போட வேண்டும் – அவ்வாறே, இயேசுவுக்கு தீமையின் மீது அதிகாரம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இயேசு வெறும் போதனை மட்டும் செய்யவில்லை; தீய சக்தியிலிருந்து மக்களை தீவிரமாக விடுவித்து வருகிறார். அவருடைய எதிரிகள் அவருடைய செயல்களைத் திசைத்திருப்புகிறார்கள்.
பின்னர் இயேசு தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார் என்று ஆணித்தரமாகப் பேசுகிறார், ஒவ்வொரு பாவமும் மன்னிக்கப்படும், ஆனால் தூய ஆவிக்கு எதிராகப் பழித்துரைப்பது மன்னிக்கப்படாது என்று கூறுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தி, ஆன்மீக வளர்ச்சியைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் அனைவருக்கும் முகவும் பயனுள்ளது என்று கூறலாம் "தூய ஆவிக்கு எதிராகத் பழித்துரைப்பவர் ஒருபோதும் மன்னிப்பு பெறமாட்டார் என்ற ஆண்டவரின் படிப்பினை நமது அன்றாட வாழ்வுக்கு அடித்தளமாக உள்ளது.
கடவுள் மட்டுமே நம் மனித இதயத்தின் ஆழத்தை அறிவார், மேலும் நமது குற்ற உணர்வை புரிந்துகொள்கிறார். கடவுள் மட்டுமே சரியான நீதிபதி. கடவுளின் இரக்கம் எல்லையற்றது என்றாலும், அனைவரும் விண்ணகத்திற்குச் செல்கிறார்கள் என்று பொருள்படாது. நமக்குத் தூய ஆவியாரின் வழிநடத்தல் இன்றியமமையாதது. அவர் மூவொரு கடவுளில் ஒருவர். அவரே இன்று திருஅவையை உண்மையை நோக்கி வழிநடத்துகிறார். எனவே, அவரைப் பழித்துரைப்பவருக்கு மன்னிப்பு இல்லை என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.
தூய ஆவியானவரை நிந்திப்பது ஒரு "பாவம்" மட்டுமல்ல; கடவுளின் உண்மை மற்றும் இரக்கத்திற்கு ஒருவரின் இதயத்தை வேண்டுமென்றே மூடுவதாகும் -
முதல் வாசகத்தில், பவுல் திமோத்தேயுவை ‘"என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு’ என்று குறிப்பட்டுள்ளதை வாசித்தோம். இதன் அடிப்படையில், பவுல்- திமோத்தேயு உறவானது தந்தை மகன் உறவாக உள்ளதை மறுப்பதற்கில்லை. இது ஆன்மீக நிலையிலான உறவு. இதன் அடிப்படையில் ஒவ்வொரு கத்தோலிக்கரும் அருள்பொழிவு செய்யபட்ட அருள்பணியாளர்களை ‘பாதர்’ (father) என்று அழைக்கிறோம். இந்த அழைப்பையும் குறைகூறி திரிபவர்கள் உளர். உண்மையில் இது தூய ஆவியானவரை பழித்துரைப்பதாகும்.
இறைவேண்டல்.
இரக்கமுள்ள ஆண்டவரே, தயைக்கூர்ந்து, நான் எந்நாளும் தூய ஆவியானவரின் வழிகாட்டுதலில் நிலைத்திட எனக்கு உதவுவீராக. ஆமென்
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452