பயன்தரும் மரமாய்ப் பண்போடு வளர்க! | செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் (216)
செல்வம் நல்லவரிடம் சேருமானால், அது பயனுள்ள மரம் ஊர் நடுவே பழுத்து நிற்பது போன்றதாகும்.
நல்லவர்களிடம் செல்வத்தைப் போன்று அறிவு. ஆற்றல், திறமை, வசதி, வாய்ப்பு, நட்பு, பதவி,உயர்வு, புகழ் போன்ற எவை சேர்ந்தாலும் அவை பலருக்கும் பயன்படும். தூய ஆவியாரின் கனிகளும் கொடைகளும் செயல்பாடுகளும் பொது நன்மைக்காகவே என்பது புலப்படும்.
அந்தக் காட்டுப் பாதையில் கரடியார் தன் தலையில் பலாப் பழம் ஒன்றைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டே வந்தார். கரடியாரின் தலையில் இருந்த பலாப் பழத்தை ஓநாய் பார்த்து விட்டார். யார் மீதாவது குற்றப்பழி சுமத்தி இன்பம் காணும் போக்கு மாந்தர் பலரிடம் இருப்பது போன்று ஓநாயிடமும் இருந்தது.
ஓநாய், கரடி அருகில் வந்து 'என்ன, கரடியாரே இன்றைக்கு வீட்டுல கொண்டாட்டமா... பலாப் பழத்தோட வர்றீங்க... அது சரி... இந்தப் பலாப் பழத்தை எந்தத் தோட்டத்தில் இருந்து திருடி கொண்டு வருRசுமக்க முடியாத அளவுக்கு இவ்வளய பெரிய பளாம் பழத்தைத் திருடமாக்கும் இப்படித் திருடி ப்பிடுவது தியாடியாரேகேட்டு எள்
உடனே கரட்டி மிகுந்த பொறுமையோடு, 'தம்பி நாயே நினைப்பது போன்று இதை நான் திருடிக் கொண்டு வரவில்லை; அந்த ஓடை பக்கத்தில் உள்ள தோட்டத்தின் உரிமையாளர்தான் இந்தப் பழத்தை எனக்குத் தந்தார்.
'இந்தாப் பார்றா... யாருகிட்ட காது குத்துறீங்க... தோட்டக்காரராவது... பழம் தர்றதாவது... சுத விடாதீங்க... முழுப் பலாப் பழத்தையும் சோத்துக்குள்ள மறைக்கப் பார்க்குறீங்களே' என்று மீண்டும் குற்றப்படுத்தி சத்தமாகச் சிரித்தார் ஓநாய்.
'ஓநாய் தம்பி. நான் திருடவும் இல்ல; அத நியாயப்படுத்தவும் இல்ல. உண்மையைத்தான் சொல்றேன், இப்பழத்தைச் சாப்பிட உனக்கு ஆசையாயிருந்தால் சொல் பழத்தில் பாதியைத் தர்றேன்.
'கரடி அண்ணே, உங்களுக்குத்தான் திருடுறதுக்குத் திறமை இருக்கே... எனக்கு முழுப் பழத்தையும் தரக்கூடாதா...'
ஓநாய் இவ்வாறு சொன்னவுடன், 'ஓ... தாராளமாகக் கொடுக்கிறேன் ' என்று சொல்லி ஓநாயின் முன்னே பழத்தை நீட்டினார் கரடி.
'அப்படியானால் உங்களுக்குப் பழம் வேண்டாமா? ஓநாய். 'பலாப் பழத்தை நான் தேடியும் போகல... திருடியும் வரல... தோட்டக்காரர் தந்தாரு... பண்போடும் நன்றியோடும் பெற்றுக் கொண்டு வந்தேன்.' என்றார் கரடி.
ஓநாய்க்கு வியப்பு... நம்ப முடியல... உண்மைய தெரிஞ் சிக்கிடலன்னா தலை வெடிச்சிடும் போல இருந்தது.
மீண்டும் கரடி. 'அப்படியே, எனக்கு வேணும்னாலும்... நான் அந்தத் தோட்டத்திற்குப் போனா அந்த ஐயா எனக்கு இன்னும் பழம் தருவார். எனவே இதனை நீ தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம்' என்று உறுதியாக அதே வேளையில் பணிவாகச் சொன்னார்.
கரடியின் அன்பான கனிவான பேச்சு, ஓநாயின் தலையில் எரிதழலைக் கொட்டுவது போன்றிருந்தது.
'கரடியாரே. என்னை நீங்க மன்னிக்கணும்! உங்களுக்குத் திருட்டுப் பட்டம் நான் கொடுத்தாலும் எனக்கு நீங்க பெருந்தன்மையோடு பழம் தர்றீங்களே... உங்களைக் குற்றப்படுத்தியதற்காக நான் வெட்கப்படுகிறேன்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் (314)
என்ற குறளுக்கு நீங்க வாழும் சாட்சி. ஆனா, அண்ணே எனக்கு இன்னும் புரியல... அந்தத் தோட்டக்காரர் ஏன் உங்க மேல இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறாரு? என்று அமைந்த குரலில் ஓநாய் உரையாடலைத் தொடர்ந்தார்.
"அதாவது தம்பி. இரண்டு சிறுவர்கள் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்று நினைக்கிறேன். ஓடை பக்கத்துல கோலிக்காய் விளையாடிக்கிட்டிருந்தாங்க, தற்செயலா தண்ணீர் குடிக்க நான் அந்தப் பக்கம் போனேன்... என்னைப் பார்த்ததும் ஒரு பையன் வேகமா மரத்துல ஏறிட்டான். அடுத்தவனை 'வாடா' என்று கூப்பிட்டான். ஆனால், அவனுக்கு மரத்துல ஏற முடியல... உடனே அந்தப் பையன் அப்படியே செத்தவன் போன்று படுத்துக்கிட்டான்.
நான் அவன் பக்கத்துல போனேன். 'ஆபத்து நேரத்துல தன் ஆற்றலைப் பயன்படுத்தி உதவாத நட்பு நல்ல நட்பு இல்ல என்று சொல்லிட்டு நான் தண்ணீர் குடிக்கப் போயிட்டேன். இதப் பார்த்துக் கொண்டிருந்த தோட்டக்காரர் என்னைக் கூப்பிட்டு என்னுடைய மனிதாபிமானத்தைக் கண்டு வியந்து என்னைப் பாராட்டி, பரிசாக இந்தப் பழத்தைத் தந்து... 'எப்ப வேண்டுமானாலும் நீ என்னிடம் உதவிக்கு வரலாம்' என்று என்னைத் தட்டிக் கொடுத்தார்". இவ்வாறு சுரடியார் சொல்லி முடிக்கவும் அந்த இரண்டு சிறுவர்களையும் அழைத்து வந்தார். தோட்டக்காரர்.
மரத்தின்மேல் ஏறி அமர்ந்திருந்த பையன் சொன்னான், 'கரடியாரே எனக்கு நல்லதொரு பாடம் கற்றுத் தந்துட்டீங்க. மரம் எனும் ஆற்றல் எனக்கு இருந்தும் நான் என் நண்பனைத் தவிக்க விட்டுவிட்டேன். அந்தத் துன்ப நேரத்தில் நான் அவனுக்குத் துணையாகத்தான் இருந்திருக்கணும்' என்று சொல்லிக் கொண்டே தன் நண்பனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இருவரும் கட்டி அணைத்துக் கொண்டார்கள்.
கண்ணீர் கசிந்திருந்த கரடியாருக்கும் தோட்டக்கார ஐயாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
ஓநாய் இவற்றையெல்லாம் பார்த்து, 'தோட்டக்கார ஐயா, கரடி அண்ணே, நீங்க எல்லாம் இவ்வளவு கனிவா, முதிர்ச்சியா, பண்பா இருக்கிறீங்களே... உங்களிடம் இருக்கிற செல்வமும் நற்பண்பும் பலருக்கும் பயன்படுகின்றன. ஊருக்குள்ள பழுத்த மரம் ஒன்று நின்றால் அது, எல்லாருக்கும் எவ்வளவு மகிழ்ச்சியோ அதேபோல உங்களப் போன்றவர்களால் எங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கு' என்று சொல்லி நல்லெண்ணத்தோடு கரடிக்கு ஒரு 'ஒ' போட்டுக் கொண்டே ஓநாய், பழத்தை பங்கிட்டுக் கொடுக்க பஞ்சபாண்டவர்கள் போல் ஐவரும் ஒருமனப்பட்டு மகிழ்ந்தனர்.
நல்லவர்களாக நல்லுறவைப் பேணுகிறவர்களாக வாழ்வோம்; கடவுள் அருளுக்கு மேல் அருளைப் பொழிவார். பயன்தரும் நற்கனி மரமாகப் பண்போடு வளர்வோம்.