அன்பு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.04.2025

அன்பு"
என்றால் என்ன?
பிறர் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதும், அதற்கான காரணங்களாக கட்டமைப்பதுமே அன்பாகும். புரிதலின் அடிப்படையில் அனைவருமே சம அளவில் இதனை விரும்புகின்றனர், இது உலகளாவியது மற்றும் நிபந்தனைகளற்றது."
மற்றவர்களின் தேவைகளை உணர்ந்து கொள்ளும் பண்புகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் விருப்பம் ஆகியவையும் இதில் அடங்கும்.
நம்முடைய உறவினராக இல்லாவிட்டாலும் அல்லது அவர்கள் நமக்கு என்ன செய்திருந்தாலும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் சம அளவில் அதனை பரப்ப வேண்டும். பௌத்தத்தில் அன்பு தான் மகிழ்ச்சிக்கான மிகப்பெரிய ஆதாரமாகும்.
அன்பு எதிர் இணைப்பு
அன்பு என்பது பிற உணர்வுகளோடு எப்போதும் கலந்திருக்கிறது. ஆரோக்கியமில்லாத இணைப்பால், நாம் ஒருவரது நற்குணங்களை மிகைப்படுத்துகிறோம் – உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ - அவர்களின் குறைபாடுகளை மறுக்கிறோம்.
நாம் அவர்களை பற்றிக் கொடிருக்கிறோம், அவர்கள் நம் மீது கவனம் செலுத்தவில்லையென்றால் வருத்தமடைகிறோம், “நான் உன்னை நேசிக்கிறேன்; என்னை எப்போதும் விட்டுச்செல்லாதே; நீயின்றி என்னால் வாழ முடியாது” என்றெல்லாம் சிந்திக்கிறோம்.
உண்மையான அன்பு என்பது நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் எல்லோரிடத்திலும் பாகுபாடில்லாத அன்பை செலுத்த விரும்புதல்.
பௌத்தத்தில் அன்பு என்பது மற்றவர்களோடு நெருக்கமாக இருக்கும் உணர்வு,
ஆனால் அவர்களும் நம்மை விரும்புகிறார்களா, அக்கறை காட்டுகிறார்களா என்ற அடிப்படையிலானதல்ல,
எனவே யாதையும் யாரும் சார்ந்திருப்பதில்லை. உடனிணைந்திருத்தல் மற்றும் சார்ந்திருத்தல் கலந்த அன்பானது நிலையில்லாதது.
நாம் விரும்பும் ஒரு நபர் துன்பத்தைத் தரும் ஏதோ ஒன்றை செய்தால், தொடர்ந்து நாம் அவர்களை விரும்புவதில்லை.
எத்தனை திருமணங்கள் காதலில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கிறது என்று பாருங்கள்! எதிர்பார்ப்புகளில்லாமல் இருந்தால், நம்மை எதுவும் தடுக்காது.
பெற்றோர்கள் எப்போதுமே தங்களது குழந்தைகளை நேசிக்கிறோர்கள், அவர்களுக்கு சிறப்பானவற்றையே விரும்புகிறார்கள், நிலையான அன்பை மேம்படுத்துவது சவாலான மனிதர்களையும் உறுதியோடு கையாளும் சக்தியைத் தருகிறது. அதற்குப் பயிற்சி தேவை, ஆனால் நம் அனைவருக்குமே அந்தத்திறன் இருக்கிறது.
நம்மை நாமே நேசித்தல்
உலகளாவிய அன்பானது பெரும்பாலும் கவனிக்கப்படாத அம்சங்களை உள்ளடக்கியுள்ளது: நம்மை நாமே நேசிக்க வேண்டியதும் முக்கியம்
சுயநலமாக, சுய முக்கியம் சார்ந்த வழியிலன்றி நம்முடைய குறுகிய மற்றும் நீண்ட கால நன்மைக்கான உண்மையான அக்கறைக்கானதாக இருத்தல் வேண்டும்.
நம்முடைய தனித்தன்மையை கெடுக்கும் சுய அழிவு அம்சங்களை நாம் விரும்பமாட்டோம், இதற்கு நம்மை நாமே துன்பத்தில் தள்ளிக்கொள்கிறோம் என்று அர்த்தமல்ல – அன்பின் எதிர்ப்பதம். பொதுவாகவே முதலில் நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவோம்.
நமக்கு நாமே அன்பு செய்ய எத்தனிக்கும் போது, இன்பத்திற்கான தீராத ஆசை மற்றும் பொழுதுபோக்கிற்காக விரும்புதல் அல்ல. இவற்றில் இருந்து நாம் பெரும் சிற்றின்பமானது நீடித்திருக்காது,
முடிவில் அதன் தேவையானது அதிகரித்தே இருக்கும். உண்மையிலேயே நம்மை நாம் நேசித்தால், தற்காலிக இன்பத்தை விடுத்து உண்மையான நீடித்திருக்கும் மகிழ்ச்சியை கண்டறிய முயற்சிக்க வேண்டும்.
நிஜத்தில் நம்மை நாமே நேசித்தால், அதன் பின்னர் நம்மால் பிறரையும் உண்மையாக நேசிக்க முடியும்.
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க வளர்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
