கடமை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.03.2024

அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்களின் கடமையை பாழாகி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
முடியாது என்று சொல்வது மூடநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை.
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியத்தை நினைத்து இரத்தம் சிந்துவதே மேல்.
நீ நீயாக இரு. வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் திறமையும் மகிழ்ச்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
