தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

திருச்சி மாவட்டம் துறையூர் ஆத்தூர் சாலையில் உள்ள மயானத்திற்கு அருகே, பிரமாண்டமாகக் காட்சி அளிக்கிறது. சுரேஷ் குமார் என்பவர், மறைந்த தனது தாய் தனபாக்கியம் என்பவருக்காகக் கட்டிய கோவில், கோவிலின் முகப்பில், "இக்கோவில் ஒரு தாய்க்காக மட்டுமே கட்டப்பட்டது அல்ல, அகிலத்து அன்னையர் அனைவருக்கும் சமர்ப்பணம்" என்ற வாசகமும், எழுதப்பட்டுள்ளது.

மேலும், நடிகரும் இயக்குநருமான இராகவா லாரன்ஸ், தன் தாய் கண்மணிக்காக, கோவில் கட்டியுள்ளார். சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், அவர் கட்டியுள்ள இராகவேந்திரா பிருந்தாவனத்தில், இந்தக் கோவில் அமைந்துள்ளது.

"என்னைக் கருவில் சுமந்து காப்பாற்றிய எனது தாய்க்கு, கருவறையில் சிலை வைத்து பெருமைப்படுத்த வேண்டும் என்பதை, எனது இலட்சியமாகக் கொண்டிருந்தேன். தாயின் பெருமையை, அருமையை உலகத்திற்குச் சொல்லவே நான் இந்தக் கோவிலைக் கட்டினேன்" என உரைக்கும் இராகவா லாரன்ஸ், "இக்கோவில், அனைத்து அன்னையருக்கும் சமர்ப்பணம்" எனவும் தெரிவித்துள்ளார்.

நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது!

"ஒரு மனிதனின் அழிக்க முடியாத பாவங்களுள் ஒன்று தாயையும் தந்தையையும் புறக்கணித்தல்.'

-திருக்குர்-ஆன்