யாரிடம் செல்வோம்?

சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

யோவான் 6-68.

ஆண்டவர் ஒரு சொல்லால் அனைத்தையும் படைத்தவர்.  அவருடைய வார்த்தைக்கு அவ்வளவு வலிமை உண்டு. அவருடைய வார்த்தைகள் அனைத்தும் வாழ்வு  தரும்.. இறந்த உடல்களுக்கு  உயிர் கொடுக்கும். உலர்ந்த எலும்புகளை உயிர் பெற செய்யும் . அடைக்கப்பட்ட வழிகளில் பாதை உருவாக்கும்.  பாலை நிலத்தில் நீர் ஓடைகளை உருவாக்கி ஓட செய்யும். அழிந்து போகும் ஆன்மாவுக்கு புத்துயிர் கொடுக்கும்.

நூற்றுவர் தலைவன் ஒரு வார்த்தை சொல்லும் என் பணியாள் குணமடைவான் என்கிறார். அத்தகைய விசுவாசம் நம்மில் இருக்கிறதா. ஆண்டவரே நாங்கள்  எங்கள் ஊன் உடலை, எங்கள்  சக்தியை நம்பவில்லை. உம்மை நம்புகிறோம். ஒரு வார்த்தை சொல்லும் என்று நம்மால் சொல்ல முடிகிறதா?.   

சீமோன் பேதுரு “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என்கிறார்.  நாமும் வாயாலும் மனதாலும் அறிக்கையிடுவோம். 

 

ஆண்டவரே நீர் எவ்வளவு பெரியவர் மகிமையும் மாட்சியும் உடையவர்.  வாழ்வளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் இருக்கும்  போது நாங்கள் உம்மை விட்டு எங்கு செல்வோம்.   ஒரு வார்த்தை சொல்லும். உம் ஆவியை அனுப்பும் ஆண்டவரே. ஆண்டவரே . எங்களுடைய நோய், வறுமை , இயலாமை, வெறுமை , எல்லாவற்றையும் மாற்ற உம்மால் முடியும் என்று நம்புகிறோம். எம்மை உயிர்ப்பிக்கும் தூய ஆவியால் எங்களை நிரப்பும்.ஆமென்