என் வழிகாட்டியே
மனஉறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார்.
உரோமையர் 2-7.
கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை.
திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை; அதனைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
நம்முடைய ஒழுக்கநெறி நம் உள்ளத்தில் எழுதப்பட வேண்டும். நம் நடத்தையில் வாழ்வில் நாம் அதை காட்ட வேண்டும். நாம் செய்வது தவறா என்று நம் எண்ணங்களே நமக்கு வெளிப்படுத்துகின்றன.
பார்வையற்றோருக்கு வழிகாட்டியாகவும், இருளில் இருப்போர்க்கு ஒளியாகவும், அறிவிலிகளுக்குக் கல்வி புகட்டுபவராகவும் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருக்கும் நாம், நம் வாழ்வை அந்த இறை நெறியில் அமைக்க வேண்டும்.
நம் நடத்தையால் நம் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படாமல் நாம் கவனமாக நடக்க வேண்டும்
ஆண்டவரே உம் அன்புக்கு தகுதியுள்ள பிள்ளையாக நான் வாழ விரும்புகிறேன். உம் வழிகளை எனக்கு காட்டும். உம் நெறிகளை எனக்கு கற்றுத் தாரும் . என் வாழ்வில் உம்மை பிரதிபலிக்க என்னோடு இருந்து என்னை நடத்தும். ஆமென்.