உம் துணையோடு
ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்; ‘எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை’ ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.
எசாயா 34 : 16
ஆண்டவர் எதுவும் தனியாக இருப்பதை விரும்புவதில்லை.
ஆதியிலே ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார்.
“இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர் என மத்தேயு நற்செய்தியில் சொல்லப்படுகிறது.
ஆண்டவரின் ஆவி மட்டுமே திருமண வாழ்க்கையை ஒருங்கிணைக்கிறது. பிள்ளைகள் அவர் கொடுக்கும் ஆசீர்வாதம். அவர் இணைத்த வாழ்வை நாம் மணவிலக்கு மூலம் பிரிப்பது பெரிய தவறாகும். நாம் ஆண்டவர் முன் ஜெபிப்போம். நம் குடும்ப வாழ்வில் ஆண்டவரின் ஆசீர்வாதங்களை நிறைவாக பெற்று ஆவியானவரின் துணையோடு வாழ இறை அசீரை வேண்டுவோம் .
அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
என்று திருக்குறள் கூறுகிறது.
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
ஆண்டவரே நீர் எனக்கு கொடுத்த துணைக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே உம் துணையோடு எங்கள் வாழ்வை அறம் நிறைந்த வாழ்வாக அமைத்து திருகுடும்பத்தின் அடிசுவடுகளை பின்பற்றி வாழ துணை செய்யும். குடும்பங்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
Daily Program
