இனிய சொற்கள்

இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.

நீதிமொழிகள் 16-24.

இனிய சொற்களை நாம் பேசுவோம். பிறருக்கு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை பேசுவோம்.  சில நேரங்களில் கோபத்தோடு சொல்லும் வார்த்தைகள் பிறரை புண்படுத்தி அவர்கள் வாழ்க்கையையே அழித்து விட கூடும். நம் வார்த்தை  உயிரூட்டுவதாக அமையட்டும் 

திருப்பாடல்கள் ஆசிரியர் சொல்வது போல

ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்; என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும் என்று ஜெபிப்போம்.  வாய்க்கு காவல் வைப்பதென்பது என்னவென்றால், எரிச்சலடையும்பொழுது வாயை மூடிக்கொண்டு சரியான வார்த்தைகளை, சரியான தொனியில் பேசுவது அல்லது பேசாமலிருக்க முயற்சி செய்வது.  

இனிய உளவாக இன்னாத கூறல் 

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. என திருவள்ளுவர் கூறுகிறார்.

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

பேசும்முன் யோசிப்போம். நம்முடைய உங்களுடைய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளா? பயன் தரும் வார்த்தைகளா? என ஒரு நொடி சிந்திப்போம். 

 

ஆண்டவரே எங்களை பயன்படுத்தும்.  எங்களுடைய வாயின் வார்த்தைகள் பிறரை துன்புறுத்தாமல் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமையட்டும். . ஆண்டவரே எங்களுடைய ஒவ்வொரு சொல்லும் பிறருக்கு  அன்னையும் , ஆறுதலையும், அரவனைப்பையும், ஒரு எழுச்சியையும் கொடுக்கும் உயிரூட்டும் வார்த்தைகளாக அமைய தூய ஆவியார் அருளை தர வேண்டுகிறோம்  ஆமென்..