அவ்வாறே செய்

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் - யோவான் 5-19. பிதாவும் இயேசுவும் சொல் செயல் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி இருந்தார்கள்.  தந்தை செய்தவற்றையே இயேசுவும் செய்தார்.

1. பிதாவானவர் வார்த்தையில் ஒவ்வொன்றையும் தோன்றுக என்றார். அவர் சொல்ல சொல்ல வானம், பூமி, நீர்திரல்கள், சூரிய சந்திர விண்மீன்கள், கோள்கள், ஊர்வன நடப்பன பரப்பன, என  எல்லாம் உண்டாயின. இயேசு வார்த்தையினால் சொல்ல சொல்ல அற்புதங்கள் நடந்தது. உன் படுக்கையை எடுத்து கொண்டு நட என்றதும் நாலு பேரால் தூக்கிட்டு வரப்பட்ட திமிர்வாதக்கரன் நடக்கிறான். சிறுமியே எழுந்து வா என்றதும் இறந்ததாக கருதப்பட்ட சிறுமி எழுந்து வருகிறாள். இலாசரே வெளியே வா என்றதும் இறந்து நான்கு நாளான இலாசர் கல்லறையில் இருந்து எழுந்து வருகிறார்.  இப்படி எத்தனை அற்புதங்கள்.

2. பிதாவானவர் செங்கடலின் நடுவே பாதை அமைத்து இஸ்ரேல் மக்கள் கடந்து போக பாதை அமைத்தார். இயேசு கடலின் மீது நடந்து வந்தார். பேதுருவையும் நடந்து வர சொல்கிறார். 

3. பிதாவானவர் மாராவின் கசப்பான தண்ணீரில் ஒரு கட்டையை போட சொல்கிறார். போட்டதும் நல்ல தண்ணீராக மாறுகிறது. இஸ்ரேல் மக்கள் தண்ணீரை குடிக்கிறார்கள். இயேசு கானாவூர் திருமண விருந்தில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகிறார். 

4. பிதாவானவர் இஸ்ரயேல் மக்களுக்கு பாலை நிலத்தில் மன்னா பொழிய செய்து பசியாற்றினார். இயேசு  அப்பம் பலுக செய்து மக்களின் பசியை ஆற்றினார். நாம் இயேசுவின் வார்த்தைகளை பின் பற்றி வாழ்வோம். பிதாவின் பிள்ளைகளாக ஆசீர்வாதங்களை பெற்று வாழ்வோம்.

ஜெபம்: அப்பா பிதாவே உமக்கு நன்றி. . இயேசுவே உமக்கு நன்றி. ஆவியானவரே உமக்கு நன்றி. எங்கள் வாழ்வை நன்மைகளால் நிரப்புபவரே உமக்கு நன்றி. தீமைக்கு விலக்கி பாதுகாப்பவரே உமக்கு நன்றி. தாயை போல அன்பு செய்பவரே உமக்கு நன்றி.  ஆமென். #veritastamil #rvatamil #companionpriest