புன்னகையை ஒரு சாதாரண செயலாக நாம் பல நேரங்களில் நினைத்தது உண்டு. ஆனால் அந்த புன்னகைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. மரண தண்டனை விதிக்க பட்ட கைதியின் தலையெழுத்தை மாற்ற கூடிய சக்தி கூட இந்த புன்னகைக்கு உண்டு.
பல நேரங்களில் நாம் நமது ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் நமது பிள்ளைகளின் வாழ்வில் திணிக்க முற்படுவோம். ஆனால் அவர்களின் ஆசைகள் என்ன ஏக்கங்கள் என்ன என்பதை கேட்க மறந்துவிடுகிறோம். அப்படி கேட்க மறந்த பெற்றோர் மற்றும் மகளின் கதையை இந்த ஒலியோடையில் கேட்போம்!
குரல்: ஜூடிட் லூக்காஸ்
அம்மாவின் அன்பிற்கு என்றுமே அளவென்பது இருந்ததே இல்லை. தாய்மை எனபது சிறந்த கோடை. அதை எப்போதும் மதித்து நம் தாய்மார்களை போற்றி பேணுவோம். நமது அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிப்போம்!
மூத்தோர் வார்த்தையை எப்பொழுதும் காதுகொடுத்துக் கேளுங்கள்; அவர்கள் கூறுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை கேளுங்கள். ஆனால் அவர்தம் வார்த்தையை நிராகரிக்காதீர்கள்.
புதிய வீடு இரண்டு படுக்கையறைகள் விசாலமான நடுக்கூடம் சமையல் அறை உயர் வகையான டைல்ஸ் பதித்தத் தரை கார் நிறுத்தம் இடம் வங்கி கடன் நகை கடன் பெற்று வீடு கட்டி முடிக்கப்பட்டது. வீட்டைக் கட்டிப்பார்.