மக்களின் சொந்த மொழியில் கதைகளைப் பகிர்வதன் மூலம், அவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்கு இன்னும் நெருக்கமாகத் தொடர்புகொள்ள முடியும். கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் அனுபவங்களில் வேரூன்றிய கதைகளை இணைய தளங்கள் வழியாக எடுத்துரைக்க வேண்டும்