ஞானம் எனும் படகு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.08.2024

உங்களோடு சில நிமிடங்கள்...

நன்மையும், தீமையும் கலந்தது தான் இந்த உலகம்.

நல்லவா்களை மட்டுமே எதிா்பாா்த்தால்
ஏமாற்றம் தான்.

தீயவா்கள் மத்தியிலும் வாழ்ந்து தான் ஆகவேண்டும்.

நல்லவர்கள் இருக்கும் இடத்தில் தான்
நான் வாழ்வேன் என்றால் வாழவே முடியாது.

என்ன செய்வது இது தான் உலகம்.

உதவி என்று கேட்டால் உதைத்து தான் தள்ளுகிறாா்கள்.

நல்ல வேலை, சில நல்லவா்களும் வாழ தான்
செய்கிறாா்கள்.

அவா்களால் முடிந்ததை செய்கிறாா்கள்

மிக்க மகிழ்ச்சி, அவர்களை நான் கை கூப்பி
வணங்குகிறேன்.

இவா்களால் தான், இந்த உலகம் சற்று நன்றாக இருக்கிறது.

இல்லையென்றால், ஒரே அசுர ராஜ்ஜியம் தான் நடக்கும்.

ஒரு அழகான வாக்கியம்.எனக்கு மிகவும் பிடித்தது.

தீயவா்கள் இந்த பூமிக்கு அழுக்கை சோ்ப்பவா்கள்

நல்லவர்கள் இந்த பூமிக்கு உப்பின் சுவையை
சோ்ப்பவா்கள்

நாம் இப்போது வெள்ளத்தில் தத்ததிளித்து
கொண்டிருக்கிறோம்.

எந்த நேரத்திலும் மூழ்கி விடலாம்
என்ற நிலையில் இருக்கிறோம்.

இந்த நேரத்தில் விவாதம் சாிபட்டு வருமா?

ஆகவே, எப்படி இதிலிருந்து தப்புவது

இது தானே , இப்போது முக்கியம்.

எப்படி தப்புவது?

சுற்றிலும் வெள்ளம்.

கண்டிப்பாக நமக்கு எதாவது தேவை?

சில நல்லவா்களால் கிடைக்கும்

ஞானம் என்ற படகில் ஏறிக்கொள்ளுங்கள்.

முடிந்தால் உங்களோடு வர விரும்புபவா்களை ஏற்றி கொள்ளுங்கள்.

அவ்வளவுதான், பிறகு திரும்பி கூட பாா்க்க வேண்டாம்.

நிம்மதியாக இருங்கள்.

நிச்சயமாக நல்லதே நடக்கும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து அனைத்து மக்களுக்கும் எல்லா வரமும் வளமும் நலமும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

மரியே வாழ்க


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி