வாய்ப்புகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.07.2024
உதிர்ந்துக் கிடக்கும் பூக்களின் வாழ்க்கை முடிந்துப் போவதில்லை,
அங்கு தான் தொடுக்கப்படுகிறது பூமாலையாக,
அதுபோலத் தான் நம் வாழ்க்கையும்,
உன் மனம் உடைக்கப்படுவதால்,
நீ நொறுக்கப்படுவதில்லை அங்கு தான் செதுக்கப்படுகிறாய்,
எப்போதும் தோல்வியைத் தனியே பிரித்துப் பார்க்காதீர்கள்.
அது வெற்றியின் ஒரு அம்சம் என்பதை உணருங்கள்,
வாழ்க்கையில் இரண்டு
வாய்ப்புக்கள் உள்ளது.
ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்வது,
இரண்டு ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை மாற்றிக் காட்டுவது,
வாய்ப்புகளைப் பயன்படுத்தி முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் வாழ்வும் நம்பிக்கையும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி