வார்த்தைகளில் கவனம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.08.2024

நரம்பற்ற நாக்கின் வரம்பற்றப் பேச்சானது இரும்பான இதயத்தையும் சிதைத்து விடும் துரும்பாக.
பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்.
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்.
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்.
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்.
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்.
காட்சி கிடைத்தால் கவலை தீரும்.
கவலை தீர்ந்தால் வாழலாம்.
நம் இயல்போடு நாம் வாழ்ந்தாலே
போதும்.
யாருக்கும் முன் உதாரணமாக வாழ வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் அமைதியும் சகிப்புத்தன்மையும் பொறுமையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
