அகிம்சை | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

அகிம்சை 
ஆன்மாவின் பண்பாதலால் அகிலத்தில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அன்பு நெறியாகும்!

பிறரையும் தன்னைப் போல் அன்பு செய்வதோடன்றி, பிறரைத் தன்னிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காமல் இருப்பதே அகிம்சை!

அகிம்சை என்பது கொல்லாமை; வன்முறையை நாடாமை; வெஞ்சினம் கொள்ளாமை; வேற்றுமைப் படுத்திப் பார்க்காமை; வெறுப்புணர்வை வளர்க்காமை! 

அகிம்சை இரக்கம் நிறை மனிதராய் நம்மை வாழத் தூண்டுவதால் எதிரியின் தாக்குதலிலும் எத்தகைய வன்முறையையும் கையாளாமல் புன்னகை மாறா அன்புள்ளத்தோடு இருத்தலேயாம்!

அகிம்சை வலிமைமிகு ஆயுதம் என்று அறியீரோ?!உலகின் அணு ஆயுதங்கள் அதன் முன் வலிமை இழந்து போகுமன்றோ?!

அகிம்சை வலிமை இழந்தவர்களின் பெருமை அல்ல; வலிமையானவர்களின் மணிமகுடம். கோழைகளின் சித்தாந்தம் அல்ல; வீரர்களின் வீரியமுள்ள விருதுவாக்கு!

அகிம்சை நம் ஆயுதம் ஆகட்டும். அன்பு நம் வாழ்வாகட்டும். அமைதி நம் இலக்காகட்டும்!

வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐🤝🤝🌹🌹🔥🔥🥰🥰🌷🌷🤍💛💜🌿🌿☘️☘️🍀🍀💞

 

எழுத்து 

அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச.
தூய ஆவியார் ஆலயம், தாகூர் நகர், புதுச்சேரி

Tamil Survey Popup Image