செவித்திறன் குறைபாடுடையோருக்காக திருப்பலிகளை விரிவுபடுத்தும் சியோல் உயர் மறைமாவட்டம் | Veritas Tamil

தென் கொரியாவின் சியோல் உயர் மறைமாவட்டம், செவித்திறன் குறைபாடுடைய கத்தோலிக்க இறைமக்கள் திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்கும் வகையில், சைகை மொழி விளக்கத்துடன் கூடிய திருப்பலிகளை மேலும் பல பங்குகளில் விரிவுபடுத்தி வருகிறது.

ஆகஸ்ட் 23 முதல், சியோல் நகரின் காங்சோ-கு பகுதியில் உள்ள தெங்க்சோன் 1-தொங் கத்தோலிக்க ஆலயத்தில் வாரந்தோறும் சைகை மொழி விளக்கத்துடன் திருப்பலி நடைபெறுகிறது என்று உயர் மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்புப் பணியை மேற்கொண்டுவரும் எபாத்தா கத்தோலிக்க ஆலயத்தைச் சேர்ந்த இரு சைகை மொழித் தன்னார்வலர்கள், ஒவ்வொரு வாரமும் இப்பங்கில் பணியாற்ற உள்ளனர்.

இந்தப் பங்கில் ஆசியாவின் முதல் செவித்திறன் குறைபாடுடைய கத்தோலிக்க அருள்பணியாளரான அருள்பணி பார்க் மின்-சியோவும், 2025ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணி கிம் டோங்-ஜுனும் பணியாற்றுகின்றனர்.

சியோல் பேராயர் பீட்டர் சுங் சூன்-தைக் அவர்கள், சைகை மொழிச் சேவையை விரிவுபடுத்துவது, செவித்திறன் குறைபாடுடைய கத்தோலிக்கர்கள் திருஅவையின் வாழ்வில் முழுமையாகப் பங்கேற்பதை உறுதி செய்வதற்கான முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்தார்.

சைகை மொழி விளக்கத்துடன் திருப்பலி வழங்குவதும், பங்குகளில் சைகை மொழி விளக்குநர்களை நியமிப்பதும் செவித்திறன் குறைபாடுடையோரின் சமய உரிமையை உறுதி செய்து, அவர்களை நம்பிக்கைச் சமூகத்தில் முழுமையாக இணைக்க உதவும் என்று அவர் கூறினார்.

மேலும், செவித்திறன் குறைபாடுடையோர் தங்களுக்கென தனியாக உள்ள ஆலயங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, தங்கள் உள்ளூர் பங்குகளிலேயே திருப்பலியில் பங்கேற்க இச்சேவை உதவும் என்று பேராயர் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறன் என்பது தனிநபரின் பிரச்சினை அல்ல; மாறாக, சமூகம் ஒன்றிணைந்து தீர்க்க வேண்டிய சவாலாகும்” என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போது, கெபோங்-தொங் மற்றும் ஹேங்குன்-தொங் பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களிலும் சைகை மொழி விளக்கத்துடன் கூடிய திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சேவைக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், தகுதியான சைகை மொழித் தன்னார்வலர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், மேலும் பல பங்குகளுக்கு இச்சேவையை விரிவுபடுத்துவதற்கான ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வு நடைமுறைகளை உயர் மறைமாவட்டம் மறுஆய்வு செய்து வருகிறது.

திருப்பலியிலும் திருஅவைச் சமூக வாழ்விலும் மாற்றுத்திறன் தடையாக இருக்கக்கூடாது என்ற தென் கொரியத் திருஅவையின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Tamil Survey Popup Image