மாற்றமே வளர்ச்சி | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

'மாற்றம்" இது வளர்ச்சி தொடங்கும் இடம்.

இந்த மாற்றம் தரும் அனுபவங்களும், சுமந்துவரும் செய்தியும், நம்மைப் புதிய பாதைக்கு அழைத்துச்செல்கிறது. அதுவே வளர்ச்சி தொடங்கும் இடமாக அமைகிறது. அதற்கான சில படிகள்....

I. பெருமதிப்பு (சுயமதிப்பு)

உன்னுடைய இறப்பு பற்றிய செய்தியை இன்றைய செய்தித்தாளில் படிக்க நேர்ந்தால்.... உனது மனநிலை என்னவாக இருக்கும்? உன்னை நீ மதிக்கக் கற்றுக்கொள்வாய். ஆம், உன்னை நீ மதித்தால்தான்; உலகம் உன்னை மதிக்கும். உன்மீதுள்ள மதிப்பு உன்னைத் தலைநிமிர வைக்கும். உங்கள்மீது பெருமதிப்புகொள்ளுங்கள். அந்த சுயமதிப்பு எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கட்டும்.

2. இலக்கு (குறிக்கோள்)

இலட்சியப் பயணத்தின் வரைபடம் இலக்கு. இலட்சியங்களைக் கொண்டு வாழ்பவர்கள்தான் இலக்கு நோக்கிப் பயணிப்பார்கள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இலக்குகளே வழி. அந்த வழிகளை வகுத்துக்கொள்ள வேண்டும். இலக்குகள் உண்மையானதாகவும், இருக்கட்டும். உயர்வானதாகவும்

8.உறுதி (விடாமுயற்சி)

சரித்திரத்தின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், முயற்சியும் உறுதியும் மட்டுமே வெற்றி பெற்ற மனிதருக்கு ஏணிப்படியாக இருந்திருக்கின்றன. சரியான நேரத்தில், சரியான முறையில், சரியான அளவில் செய்யப்பட்ட முயற்சியும் உறுதியும் தோற்றதாகச் சரித்திரம் இல்லை. மூச்சிருக்கும் வரை முயற்சி நமதாகட்டும். உயிர் இருக்கும் வரை உறுதி தொடரட்டும்.

4. விருப்பத் தேர்வு (தேர்ந்தெடுத்தல்)

உள்ளவர் -இல்லாதவர் இருவருக்கும் வாய்ப்புகள் சம அளவில் அவரவர் விருப்பத்தேர்வைப் பொறுத்ததுதான். உங்களின் 'தேர்வு' கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வாய்ப்புகள் செயலாக்கம் பெறுவது சிறந்ததாக இருக்கட்டும். இதில் தீர்மானமாக இருந்தால் சிகரம் உயரும். தெளிவு நிறைந்த கனவுகளோடு உங்கள் 'தேர்வு' இருக்கட்டும்.

5. ஊக்கம்-வலிமை-ஆற்றல்

வாழ்க்கை கல்லைப்போல் நின்றுகொண்டிருப்பதில்லை. நதியைப்போல் நகர்ந்துகொண்டிருக்கிறது. குழுவாகப் பயணிக்கின்ற வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும், நமக்கு, வலிமை தேவை. ஆற்றல் தேவை. ஊக்கம் தேவை. இவற்றை நம் உறவுகளிடமிருந்தே பெறமுடியும் இந்த நலமான உறவுகள் வளமான வாழ்விற்கு அவசியம். அவர்கள் தருகின்ற ஊக்கம் உயரட்டும். வலிமை பெருகட்டும்.

6. நேரம் (இந்த மணித்துளி)

நேரம் விரைவாய்ச் செல்கின்ற காற்றைப்போலக் கடந்துவிடும். இழந்த மணித்துளியைத் திரும்பப் பெறவும் முடியாது. வாங்கவோ, விற்கவோ, இருக்கும்போது சேமித்துவைக்கவோ இயலாது. 'நாளைக்குத் தொடங்குவோம்' என்ற ஒத்திவைப்புத் தீர்மானம் வெற்றியை ஒத்திவைக்கின்றது. இந்த மணித்துளி விலையுயர்ந்தது. இந்தக் கணப்பொழுதிற்கு மரியாதை கொடுப்போம். வாழ்வை, மாற்றத்தை, வளர்ச்சியை இப்போதே தொடங்குவோம்.

வளர்ச்சிக்கான இந்த நிலைகளில்....
நம்மேலேயே நாம் பெரு (சுய) மதிப்பு கொண்டு, 
அடைய வேண்டிய இலக்கை நோக்கி 
உறுதியோடும் விடாமுயற்சியோடும் பயணம்செய்ய, தேவையானதை மட்டும் உள்ளுணர்ந்து தெரிவுசெய்து, உறவுகள் தருகின்ற வலிமையாலும்,
ஊக்கத்தாலும், புதுவாழ்வைத் தொடங்குவோம். 
மாற்றம் - இதுதான் வளர்ச்சி தொடங்கும் இடம்.

Tamil Survey Popup Image