செபமாலைக் கவசம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
திரு அவையில் மரியன்னையின் பக்தி முயற்சிகளில், செபமாலை செபிப்பது முதலிடம் பெறுகிறது. செபமாலை பக்தி முயற்சியில் பங்கேற்கும்போது, மரியன்னையின் அரவணைப்பில் நாமிருக்கின்றோம். மீட்பைப் பற்றிய காட்சித் தியானத்தில் நம்மை இணைக்கின்றோம்.
அயர்லாந்தில் ஒரு தியானம் நடைபெற்றது. அதில் ஆண்டவரின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு பற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன. அதில் முதலில் தியான மறையுரை அதன்பின் 10 மங்கள வார்த்தை செபம் என்று மீட்பு பற்றிய ஒவ்வொரு தியான உரைக்குப் பின்பும், பத்து, பத்து மணிகள் சொல்லப்பட்டன. அந்தத் தியான மறையுரைகளே பின்னாளில் மறை உண்மைகளாக மாற்றம் பெற்று செபமாலை ஆயிற்று.
'லூயி பாஸ்டர்' என்னும் பெயரைச் சொன்னவுடனே மருத்துவ உலகமே தலை நிமிர்ந்து நிற்கும். அவரது ஆழ்ந்த திறமை, மேலோங்கிய அறிவு, முதிர்ச்சியின் மூலம் புதிய மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொடுத்தவர். மனது ஒன்றிய வகையில் மருத்துவச் சேவை செய்தவர். எளிய தோற்றம் உடையவர். கத்தோலிக்க நம்பிக்கையில் ஊன்றியிருந்தவர். அனைத்திற்கும் மேலாக மரியன்னைமீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தவர்.
அவர் ஒரு முறை பாரீஸ் நகரத்திலிருந்து, வேறோர் ஊருக்கு இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். தனக்குரிய இடத்தில் அமர்ந்து செபித்துக்கொண்டே பயணம் தொடர்ந்தார். அதே பெட்டியில் சில இளைஞர்கள் ஆடல், பாடலுடன் அவரை நெருங்கி வந்து கேலி செய்தனர். தங்களோடு ஆடவரும்படி வலுக்கட்டாயப்படுத்தி அவரை இழுத்தனர். அப்போது அவருடைய கையிலிருந்து ஒரு பெரிய ஆயுதம் கீழே கிண்டலாக, "தங்கள் இனிய பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?" என்று விழுந்தது. அதுதான் செபமாலை. அதைப் பார்த்த வாலிபன் மேலும், கேட்டான். அவரோ தன் சட்டைப் பையிலிருந்து ஒரு Visiting Cardஐ எடுத்து நீட்டினார். அதில் லூயி பாஸ்டர், முனைவர், ஆராய்ச்சியாளர் - அறிவியல் ஆய்வு மையம் என்று எழுதியிருந்தது. மேலும் அவர், "இது என் அடையான அட்டை. ஆனால், இது என் பாதுகாப்புக் கவசம்" என்று செபமாலையைக் காட்டினார். அடங்காத அந்த வாலிபர்கள் வாயடைத்து நின்றனர். செபமாலையின் உருவம் அவர்கள் மனதில் பதிந்தது. (செபமாலை நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கும்)
செபமாலை வெற்றியின் சின்னம்:
லெபோந்தோ என்னுமிடத்தில் 1571இல் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் போர் மூண்டது. கிறிஸ்தவ மக்களும், போர் வீரர்களும் செபமாலை செபித்து மன்றாடினார்கள். வெற்றி பெற்றார்கள் (செபமாலை செபித்தால் தோல்வி தோற்கடிக்கப்படும்)
1863இல் கிறிஸ்தவர்களுக்கும், துருக்கியர்களுக்கும் போர் நடைபெற்றபோது, கிறிஸ்தவர்கள் தோல்வி அடையும் நிலையில் இருந்தார்கள். ஆனாலும் நம்பிக்கையோடு செபமாலை சொல்ல ஆரம்பித்தார்கள். வெற்றி பெற்றார்கள். (வெற்றி பெற்றவர்களின் கேடயம் செபமாலை)
13ஆம் நூற்றாண்டில் பரவிய ஆல்பி ஜென்சிய தப்பறைக்கு எதிராகப் பேச புனித சுவாமிநாதரை, திருத்தந்தை 3ஆம் இன்னொசென்ட் நியமித்தார். ஆனால், தமது போதனை எடுபடவில்லை என சுவாமிநாதர் மனம் நொந்து இருக்கும்போது, அன்னை கன்னி மரியா மூன்று வானதூதர்களுடன் அவருக்குக் காட்சி கொடுத்தார். “நீர் போதனை செய்யும்போது மக்களை செபமாலை செபிக்கும்படி சொல்லும். அதன் வழியாகத்தான் உம் வார்த்தைகள் அவர்களின் ஆன்மாக்களில் விழுந்து பலனைக் கொடுக்கும். இத்தகையப் போராட்டங்களில் வெற்றியைத் தருவது செபமாலைதான் என்பதை நீர் அறிந்திருக்க வேண்டும்" என்றார். அதன்படி சுவாமிநாதர் முயற்சி செய்ய ஆல்பிஜென்சிய தப்பறை வீழ்ந்தது. (செபமாலை போராட்டங்களை வெல்ல வைக்கும்)
சுமர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி மார்க்கோசுக்கு எதிராக இலட்சக்கணக்கில் திரண்ட மக்கள் கையில் செ.மாலைகளோடு நின்றார்கள் பீரங்கிகளும், கனரக ஆயுதங்களும் செபமாலையின் சக்திக்குமுன் அடிபணிந்தன இதை அன்று உலகமே கண்டது / செபமாலை கிறிஸ்தவர்களின் போர்வாள்)
திருஅவையால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துப் பக்தி முயற்சிகளிலும் உயர்ந்தது செபமாலையே செபமாலையின் வழி அநேக புதுமைகள் நிகழ்ந்துள்ளன. ( திருத்தந்தை 9ஆம் பத்திநாதர்)
உலகில் அமைதி நிலவ, போர்கள் மறைய செபமாலை செபிக்க வேண்டும் (பாத்திமா காட்சி)
கடவுளின் ஆசீர் நம் குடும்பங்களின்மேல் இருக்க ஒரே வழி "செபமாலை செபிப்பது" (திருத்தந்தை 12ஆம் பத்திநாதர்)
தொடர்ந்து செபமாலை செபிப்பவர்கள், பாவ வாழ்க்கையைத் தொடர முடியாது. ஒன்று அவர்கள் பாவத்தை விட்டுவிடுவார்கள் அல்லது செபமாலை செபிப்பதை விட்டு விடுவார்கள் (ஆயர் ஹியூக் டாய்ல்)
செபமாலை என்பது உலகம் முழுமைக்குமான, மகிமை நிறைந்த உலகளாவியச் செபம். (திருத்தந்தை 23ஆம் யோவான்)
செபமாலை நற்செய்தி பற்றிய முழுமையான தியானம் (திருத்தந்தை 6ஆம் பவுல்)
தினமும் மாலை வேளைகளில் செபமாலை செபிக்கின்ற குடும்பங்கள் அழகானவை. மேன்மையானவை (திருத்தந்தை 2ஆம் ஜான்பால்)
செபமாலை என்பது கடவுளால் நேசிக்கப்படுகின்ற விலையுயர்ந்த சொத்து (புனித லூயிஸ் தே மான்போர்ட்)
விசுவாசப் பிரமாணம்:
நமது விசுவாசத்தைப் புதுப்பித்து அறிக்கையிடச் செய்கிறது.
கர்த்தர் கற்பித்த செபம்:
செபங்களில் எல்லாம் மிக மேலான செபம். இயேசுவே கற்றுத்தந்தது.
மங்கள வார்த்தை செபம்:
கடவுளால் 'இறைமகன்' அனுப்பப்பட்ட உண்மையை சொன்ன தேவதூதரின் அறிக்கை.
திருத்துவப் புகழ்:
மூவோர் இறைவனுக்கு நாம் அளிக்கும் புகழ்ச்சியும், மகிமையும்.
இத்தகைய மேன்மை மிகுந்த செபமாலைப் பக்தியை நமதாக்குவோம். பக்தியுடன் செபிக்கும்போது, தனிப்பட்ட வாழ்வில், குடும்பத்தில், திருஅவையில், உலகில் அமைதி நிலவும். அன்பு மிளிரும் செபமாலை மூலம் தீர்க்க இயலாத பிரச்சனைகளே இல்லை. இப்புனித செபமாலை நம் உடல், உள்ளம், ஆன்மா இவற்றைக் காக்கும் கேடயம். அவற்றைத் தூய்மைப்படுத்தும் கருவி. இந்த மலர் கிரீடத்தை அன்னைக்குச் சூட்டி வரங்களைப் பெற்றுக் கொள்வோம்.
''செபமாலை சொல்லும் பழக்கம் அருள்தீபம் ஏற்றும் வழக்கம் ஆகும். எனவே, செபமாலையைத் தினமும் செபிப்போம்."