சுற்றத்தோடு பகிர்ந்து உண்ணுக! | செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

சுற்றத்தோடு பகிர்ந்து உண்ணுக!
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள (527)
கிடைத்த உணவை, காகம் தன் இனத்தை அழைத்துக் கூடி உண்ணும். அதுபோல் சுற்றத்தோடு பகிர்ந்து வாழ்வோருக்கே செல்வங்கள் உண்டு. அருள், பொருள் என்னும் இருவகைச் செல்வங்களும் பெருகுவதுண்டு.
உழைக்கும் மக்களுக்கான வாழ்வுரிமைப் போராட்டங்கள் தமிழகத்தில் பெருகிவரும் காலம் இது. காவிரி ஆற்றுரிமை, கூடங்குளம் அணுஉலைத் தடுப்பு, தலித் கிறித்தவர் சம உரிமை, தமிழ் ஈழ விடுதலை... எனப் பட்டியல் நீள்கிறது. போராட்டங்கள் வெற்றி பெற நிலைத்த ஒற்றுமை தேவை.
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் - இந்த உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தப் பாருங்க - அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒற்றுமைக்கு காக்கையைச் சுட்டிக் காட்டுவதுண்டு, பாட்டி சுட்ட வடையை, காக்கையைத் தொடர்ந்து நரி 'சுட்ட' (திருடிய) கதையை நாம் அறிவோம். அந்தக் கதையைத் தழுவி சீனாவில் பொது உடைமை உணர்வோடு உருவாக்கப்பட்ட கதை இதோ!
பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாங்க... காக்கா வந்தது. அக்கம் பக்கம் பார்த்தது. 'பாட்டி, பசிக்குது; ஒரு வடை கொடு!' என்று கேட்டது. நானே சுள்ளி விறகு இல்லன்னு துன்பப்பட்டுகிட்டிருக்கேன். என்று பாட்டி சொன்னதும் காக்கா பறந்து போனது. கொஞ்சநேரம் கழித்து விறகுக் குச்சிகளோடு காக்கா வந்தது. பாட்டிக்கு மகிழ்ச்சி. வடை சுடச்சுட நன்றாக விற்பனையாகிக் கொண்டிருந்தது.
'பாட்டி எனக்கு பசிக்குது ஒரு வடை கொடு, நான் போயிடுறேன்,' என்று சொன்னது காக்கை. பாட்டி கோவத்தோடு 'நீ என்ன தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்கிற, இப்ப தரமுடியாது போயிடு!'
உடனே காக்கா சொன்னது; 'பாட்டி முதல்ல நான் கேட்டது என் பசியை ஆற்ற ஓர் உதவி. இப்ப நான் கேட்பது என் உரிமை. என் உழைப்புக்கான கூலி கொடு!' என்று உறுதியாகக் கூறியது. இது அரசியல் விழிப்புணர்வு பெற்ற காக்கா என்று பாட்டி புரிந்து கொண்டார். வடையைப் பெற்றுக் கொண்ட காக்கா தன்மானத்தோடு பறந்து சென்று மரக்கிளையில் அமர்ந்தது. நரி வந்தது.வழக்கம் போல் ஏமாற்றியது. பாடச் சொன்னது. வடையைத் தன் காலில் வைத்துக் கொண்டு 'கா... கா...' பாடியது. வடை கீழே விழவில்லை. நரியும் ஏமாற்றும் முயற்சியை விடவில்லை.
'குயில் போல பாடுற நீ ஆடுனா மயில் போல அழகாய் இருக்குமே ' என்றது நரி.
கொள்கைப் பிடிப்பாளர்கள் கூட அழகு மயக்கத்தில் வீழ்ந்து விடுவது போல காக்கா மதியைத் தொலைத்தது... வடையை மறந்தது... நடனமாடியது... திடீரெனத் தன் காலுக்கடியில் இருந்த வடை தழுவுவதை உணர்ந்த காக்கா'என போராட்ட சல் ஓங்கி ஒலித்தது.
வடையை தசி கவ்வுவருக்கு முன் தூற்றுக்கணக்கான செங்கைகள் பருந்து வந்தன. செய்கியைப் புரிந்து கொண்ட கால்கைதரியைச் சூழ்ந்து கொண்டண. வடையை விட்டாலும் தாழ்வில்லை; உயிரை விட்டுவிடக்கூடாது என்று எண்ணிய தரி பல காயங்களோடு தப்பி ஓடிகரு வடை மீட்கப்பட்டது. இன விடுதலை அடைந்த மகிழ்ச்சி அங்கே. அவ்வடையைக் காக்கைகள் பகிர்ந்து
பொருட்பாலில் வரும் அரசியலில் உள்ள 23 அதிகாரங்களுள் ஒன்றான 'சுற்றந்தழால்' (32) என்னும் அதிகாரத்தில் இக் குகள் இடம் பெறுகிறது.
தனக்குக் கிடைப்பதைக் காக்கை மறைப்பதில்லை; எவரந்து மற்ற காக்கைகளுக்கு அறிவித்து பகிர்ந்து உண்ணுகிறது. பறவை இனம் ஒன்று; அதில் ஒன்று காக்கை அதுபோல மாந்தர் இனம் ஒரே இனம்: அதில் ஒன்று தமிழ் இனம்இ இங்கு சாதிக்கு இடம் இல்லை தமிழர் அனைவரும் சுற்ற கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மாந்தர் இனத்தில் மொழி வழியிலான மக்கள் தொகுப்பைத் தேசிய இனம் என்கிறோம். அந்த வகையில் ஒவ்வொரு மாந்தரும் ஆற்றலை, திறமையை, நேரத்தை, வாய்ப்புகளைத் பகிர்ந்து வாழ்தல் என்பதே 'சுத்தந்தழால் ஆகும் சுற்றத்தோடு பகிர்ந்து உண்டு அன்புற்று இன்புற்று ஒன்றித்து வாழ்வோமே!
எழுத்து
செ.ரெ.வெனி இளங்குமரன்
Daily Program
