தெளிவான இலக்கு | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
" வெற்றி அடைவதற்காக எந்த முயற்சிய ஈடுபட்டாலும், அதை நோக்கி செல்வதற்கு உங்களுக்கு உறுதியான இலக்கு இருக்கவேண்டும். அந்த இலக்கு தெளிவானதாக இருக்கவேண்டும். இலக்கை அடைவதற்கு உறுதியான திட்டங்கள் இருக்கவேண்டும் டாக்டர்ஹில்
இலட்சியங்களைக் கொண்டு வாழ்பவர்கள் இலக்குகள் நோக்கிப் பயணிப்பவர்கள், இலக்க இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. இலக்கை நோக்கி பயணம் செய்பவர்கள் ஒவ்வொருவரும் அந்தப் பயணத்தில் தங்களுடைய தனித்துவம், திறமை போன்றவற்றை வெளிப்படுத்திப் போராடி வெற்றி பெறுகிறார்கள். இந்த வெற்றியைத் தரும் இலக்கை தெளிவாக்குவது கல்வியே.
ஒவ்வொரு படைப்புக்கும் ஓர் இலக்கு உண்டு. அவை படைத்தவரால் தீர்மானிக்கப்பட்டு நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதர் மட்டும் அவரது இலக்கை அவரே தீர்மானித்துக் கொள்கிறார். தேர்ந்து தெளிந்து விரும்பிய இலக்கை அடையத் திட்டம் தீட்டுகிறார். இது உண்மை. இதில் நாம் இலக்கை அடைய, அதன் தன்மை உயர்வானதாகவும், உண்மையானதாகவும், சாத்தியமானதாகவும் இருக்க வேண்டும். இவற்றைத் தருவது கல்வி மட்டுமே.
எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறோம் என்பதைவிட எந்தத் திசையில் பயணித்து இலக்கை அடைகிறோப் என்பதுதான் முக்கியம். நமது இலக்கு தேவையானதாக, நேர்மையுடையதாக, நெகிழ்வுத்தன்மை கொண்டதாக அளந்து பார்க்கக் கூடியதாக, மேல்நோக்கி வளர்ச்சி உடையதாக அமைய வேண்டும். இத்தகையப் பண்புகளைக் கொண்ட இலக்கே நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்.
மலை மேலே ஓர் அழகிய ஊர். மலைக்குக் கீழேயும் ஓர் அழகிய ஊர்க்கு இந்த இரண்டு ஊர்களுக்குமிடையே ஓயாத பிரச்சனை, சண்டை நடந்துகொண்டேயிருந்தது. ஒரு சண்டையின்போது கீழே உள்ள ஊரிலுள்ள குழந்தையை மேல் ஊர்க்காரர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். அது ஊர்க்காரர்களுக்கு மானப்பிரச்சனையாகி விட்டது. பெற்ற தாய் உணவு, உழக்கம் மறுத்து, கண்ணீர் வடித்து நின்றார். எப்படி குழந்தையை மீட்பது? எர்க்கூட்டம் போட்டு விவாதித்தனர். இறுதியில் அவர்களில் சில இளைஞர்கள் மலையேறிக் குழந்தையை மீட்பது என்பது முடிவானது. அனுபவம் இல்லாத அவர்கள் மலையேறத் தொடங்கினர்
ஒரு நாள், இருநாள், மூன்று நாள் என நாள்கள் கடந்தன. ஆனால், கால்வாசி உயரத்தைக் கூடக் கடக்கவில்லை. முயற்சியைக் கைவிடவும் இளைத்துப் போயினர். அசதியில் கூடாரம் போன்று இருந்த ஒரு மரத்தின் இல்ல. பத்துநாளில் பாதி மலையைத்தான் தாண்டியிருந்தனர். களைத்து நோக்டியில் ஓய்வெடுத்தனர். அப்போது மலைமேலிருந்து ஒரு பெண் கையில் குழந்தையோடு விறுவிறுவென கீழே இறங்கிக்கொண்டிருந்தார். எல்லோரும் அவரை உற்றுப்பார்த்தனர். அவர் வேறு யாருமல்ல குழந்தையைப் பறிகொடுத்த தாய்தான்.
"ஏம்மா! நீ எப்படி இங்கே?” என்று ஒருவர் கேட்க. “குழந்தையை மலைமேலிருந்து மீட்டுக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிக் குழந்தையை அணைத்துக்கொண்டார்.
அனைவரும் திகைத்து நின்றனர். அவர்களில் ஒருவர் கேட்டார். "இவ்வளவு நாள்கள் முயன்றும் எங்களால் மேலே ஏறிவர முடியவில்லையே, ஏன்?" தயங்கியபடி தாய் சொன்னார், “ஏன்னா, இது உன் குழந்தை இல்லை”.
இங்கு தாய்க்குத் தான் இழந்த குழந்தைதான் இலக்கு. அந்தக் குழந்தை திரும்பத் தனக்கு வேண்டும் என்ற இலக்கினைத் தானே உருவாக்கிக் கொண்டார். இலக்கு தெளிவானதாக உண்மையானதாக இருந்தது. அந்த இலக்கினை அடையத் தன் வழியைத் தானே திட்டமிட்டுத் தீர்மானித்துக் கொண்டார். அதில் பிடிப்பு இருந்தது. பிடிப்பு இல்லாமல் எந்த இலக்கையும் பிடிக்க முடியாது. இலக்குப் பயணத்தில் இன்ப, துன்ப அனுபவங்கள் கலந்து இருக்கும். இவற்றைப் பிரித்து ஒரு தெளிந்த பார்வையை உருவாக்குவது கல்வி. மாறிவரும்
இக்காலச் சூழலில், வளர்ந்துவரும் அறிவியல் யுகத்தில் நமக்கென்று ஒரு தெளிவான இலக்கை உருவாக்குவதன் மூலம்தான், நமது வாழ்வுப் பயணம் வெற்றியடையும். அவ்வெற்றிக்கான தெளிவான இலக்கைக் கொடுக்கும் கல்வியை நமதாக்குவோம். கற்பதைக் கசடறக் கற்போம். அது நமக்கு நல்ல இலக்கைத் தீர்மானிக்கட்டும். வெற்றியைத் தரட்டும்.