புரிதல் என்றால் என்ன ? ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.07.2024
புரிதல் என்ற ஒரு ஒற்றை சொல்...!
அதன் ஆழமான உட்பொருளை புரிந்து கொண்டால் வாழ்க்கை பயணம் குடும்பம், உறவு, நட்பு எல்லாமே சிறப்பு.
புரிதல் என்றால் என்ன ?
இருக்கும் சூழ்நிலையை புரிந்து
கொண்டு, மேற்கொண்டு
சிக்கலாக்காமல், மென்மையாக
தீர்வு கண்டு, அனைவரையும் அன்பால் ஆரவணைத்து பயணித்தல் என்றும் சொல்லலாம்.
ஞான மார்க்கத்தில்
Realisation.
புரிதல் இருக்கும் இடத்தில்
ஆணவத்திற்கு வேலை இல்லை.
நான் என்ற Ego இல்லை.
புரிதல் இருக்கும் இடத்தில் என்ன
சிறப்பாக செய்ய வேண்டும் என்று
நமக்கே தெளிவாக விளங்கும்.
அடுத்தவர் ஆலோசனை என்ற
பெயரில் எந்த குழப்பமும் தேவை இல்லை.
புரிதல் இருக்கும் இடத்தில் நீ பெரியவன், நான் பெரியவன் என்ற போட்டிக்கே இடமில்லை.
புரிதல் இருக்கும் இடத்தில் எதையும் பொறுத்து கொண்டு, அனுசரித்து கொண்டு செல்வதால் பிரிவிற்கு இடமே இல்லை.
புரிதல் இருந்தால், குடும்ப
வாழ்வில் எல்லாமே சிறப்பு.
புரிதலில்தான் அன்பும்,
கருணையும் அழகாய்மலர்கிறது.
புரிதல் என்ற ஒற்றை சொல்லின் உட்பொருள் புரிந்தால், வாழ்வையே
திசை திருப்பும் மந்திரக்கோல்.
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி