திமோர் லெஸ்டவில் திருத்தந்தையின் திருப்பயண நிகழ்வுகள்

பப்புவா நியூ கினியாவில் உள்ள அனைத்து இளைஞர்களையும் சந்தித்த பிறகு, போப் பிரான்சிஸ் திமோர் லெஸ்டேக்கு புறப்பட்டார்.உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு தலைநகர் டிலியின் பிரசிடென்ட் நிகோலா லோபாடோ சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ்

 

போப் திமோர்-லெஸ்டேக்கு வந்தவுடன், அவரது முதல் நிகழ்வு மாலை 6 மணிக்கு  ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே வரவேற்பு விழாவில் பங்கேற்றார். அதன்பின் மாலை 6:30 மணிக்கு குடியரசு மாளிகையில் குடியரசுத் தலைவருடன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார்.பின்னர் இரவு 7:00 மணிக்கு, ஜனாதிபதி மாளிகையில்  அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் தூதரகப் பணிக்குழுவினரை சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார்.

செப்டம்பர் 10, செவ்வாய்க் கிழமை காலை திருத்தந்தை பிரான்சிஸ் இர்மாஸ் அல்மா பள்ளிக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளை சந்திக்க இருக்கிறார். காலை 9:30 மணிக்கு, திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள், கன்னியர்கள், பொதுநிலையினர் மற்றும் மதபோதகர்களை புனித அமல அன்னை பேராலயத்தில் சந்தித்து அவர்களுடன் உரையாடவுள்ளார்.பின்னர், காலை 10:45 மணிக்கு, அப்போஸ்தலிக் நன்சியேச்சரில் இயேசுவின் சங்கத்தின் உறுப்பினர்களுடன் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசவுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ்

 

இந்தோனேசிய ஆக்கிரமிப்பின் போது, ​​அக்டோபர் 12, 1989 இல் புனித ஜான் பால் II வருகை தந்தார். திமோர் லெஸ்தேவுக்கு வருகை தரும் இரண்டாவது போப்பாண்டவர், மேலும் 2002 இல் இந்தோனேசியாவிலிருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகு வரும் முதல் திருத்தந்தை பிரான்சிஸ் ஆவார்.

இந்த திமோர் லெஸ்டே திருத்தந்தை பயணத்தின் மையக் கருப்பொருள், "உங்கள் நம்பிக்கை உங்கள் கலாச்சாரமாக இருக்கட்டும்"
இந்தோனேசிய ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கான அவர்களின் போராட்டத்தின் போது, ​​திமோர் மக்கள் கத்தோலிக்க திருச்சபையால் தீவிரமாக ஆதரிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 10 ஆம் தேதி ஆகிய இன்று டிலியின் டாசி டோலு எஸ்பிளனேடில் நடைபெறும் திருப்பலியில் அண்டை நாடுகளான இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் சுமார் 700,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.