புதிய கல்விக்கொள்கை பற்றி சிந்திக்க வைத்த மாத்திரவிளை மறைவட்ட இளைஞர் இயக்கக் கலைவிழா| Veritas Tamil
குழித்துறை மறைமாவட்டம், மாத்திரவிளை மறைவட்ட இளைஞர் இயக்கக் கலைவிழாவானது, “இளைஞர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் புதிய கல்விக்கொள்கை” என்னும் தலைப்பில் வெள்ளியாவிளை பங்கில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. ஜனவரி 26, காலையில் துவக்கப்பாடலானது நல்லாயன் பங்கு இளைஞர் இயக்கத்தினரால் பாடப்பட்டது.
மாத்திரவிளை மறைவட்ட இளைஞர் இயக்க தலைவர் செல்வன்.ஷெபின் ஷஜூ தலைமை தாங்கினார். வெள்ளியாவிளை பங்குத்தந்தை Fr. ஜேசு மரியான் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து, இளைஞர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கும் புதிய கல்விக்கொள்கை எனும் தலைப்பில் யுகசக்தி ஆசிரியர் திரு. ரெஞ்சித் அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். மாத்திரவிளை மறைவட்ட முதல்வர் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
மறைமாவட்ட இயக்குநர் அருள்பணி.ஆல்பின் ஜோஸ் மற்றும் மறைவட்ட இயக்குநர் அருள்பணி.மரிய ஆன்றோ கால்வின் ஆகியோரும் பங்கேற்றனர். தொடர்ந்து கலை போட்டிகள் ஆரம்பமானது. குழு போட்டிகளாக, குழு நடனம், குழு நாடகம் மற்றும் குழுப்பாடல் போட்டிகள், தனிநபர் போட்டிகளாக கவிதை, ஒவியம், மற்றும் வினாடிவினா போட்டிகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் ஆரம்பமானது. துவக்கப்பாடல் மணலிக்குழிவிளை இளைஞர் இயக்கத்தினரால் பாடப்பட்டது. மறைவட்ட துணைச்செயலர் செல்வி. அருள் ஜென்சி அனைவரையும் வரவேற்றார்கள். மறைமாவட்ட இளைஞர் இயக்க துணைச்செயலர் செல்வி. லாவண்ணியா வாழ்த்துரை கூறினார்கள். தொடர்ந்து, மறைமாவட்ட இளைஞர் இயக்க தலைவர் செல்வன். அபிஜோ வாழ்த்துரை கூறினார்கள். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, மறைவட்ட துணைத்தலைவர் செல்வி. டெனிகா நன்றியுரை கூறினார்கள். வட்டார பொருளர் செல்வி. லின்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். பின்னர் இயக்கப்பாடலுடன் கலைவிழா இனிதே நிறைவடைந்தது. இவ்விழாவில் மறைவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இணை இயக்குநர் மற்றும் கள்ளப்பணியாளர் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர். இதில் மொத்தம் 117 பேர் பங்கேற்றனர்.