ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவின் "பணி ஏற்பு மற்றும் பணி நிறைவு'' கொண்டாட்டம். | Veritas Tamil

ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவின் "பணி ஏற்பு மற்றும் பணி நிறைவு'' கொண்டாட்டம்.


ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவின் புதிய பொது மேலாளராக அருட்தந்தை ஃபெல்மர் ஃபீல், SVD,நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரேடியோ வேரித்தாஸ்  ஆசியா (RVA) வளாகத்தில் நடந்த எளிமையான ஆனால் கண்ணியமான விழாவில், அருட்தந்தை ஃபெல்மர் காஸ்ட்ரோட்ஸ் ஃபீல், SVD, புதிய பொது மேலாளராக முறைப்படி பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 1. 2025 அன்று பிலிப்பைன்ஸின் கியூசன் நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு, PREIC வாரியத்தின் பொருளாளராகவும்  இருக்கும் நோவாலிசெஸ் ஆயர் ராபர்டோ கா தலைமை தாங்கினார். பணி நிறைவு பெற்று செல்லும் மேனாள் பொது மேலாளர் அருட்தந்தை விக்டர் எஃப். சடயா, CMF;  திட்ட இயக்குநர் மற்றும் சமூகத் தொடர்பு அலுவலகத்தின்(FABC-OSC); நிர்வாகச் செயலர் அருட்தந்தை ஜான் மி ஷென் மற்றும் சுஏயு ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். ரேடியோ வேரித்தாஸ்  ஆசியாவின் மொழிச் சேவைகளின் ஒருங்கிணைப்பாளர்கள் இணைய வழியில் இணைந்தனர்.

அருட்தந்தை மி ஷென் தலைமையில் சிறு செபத்துடன் இந்நிகழ்வு தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஊழியர்களின் சுருக்கமான அறிமுகங்கள் இடம்பெற்றன.

அருட்தந்தை சடயா, தனது பிரியாவிடை செய்தியில், ஒன்பது ஆண்டுகால சேவைக்கு ஆதரவளித்த RVA குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார். அவரது பதவிக் காலத்தில், RVA குறுகிய அலை வானொலி ஒலிபரப்பில் இருந்து டிஜிட்டல் தளங்களுக்கு ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டது. டிஜிட்டல் யுகத்தில் RVA -வின் தொடர்ச்சியான பொருத்தத்தை உறுதிப்படுத்த, ஆன்லைன் பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளும் இதில் அடங்கும். RVA -வின் 50வது ஆண்டு விழா கொண்டாட்டம், சொத்து மேலாண்மைக்கான RVA-யின் துணை நிறுவனமான யூனிடாஸ் ஆசியா கார்ப்பரேஷனை நிறுவுதல், மற்றும் அரங்கத்தையும் சமூக மண்டபத்தையும் புதுப்பிப்பதோடு RVA அருங்காட்சியகத்தின் கட்டுமானம் போன்ற முக்கிய நிகழ்வுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அருட்தந்தை சடயா, RVA-வின் இலக்கு, நோக்கம் மற்றும் மதிப்புகளை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புள்ள சக ஊழியர்கள் மற்றும் பங்காளர்களுடன் பணிபுரிவது "வாழ்நாளின் கௌரவம்" என்று கூறி, இந்த மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், புதிய தலைமைக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் உறுதியளித்தார்.

ஆயர் தனது உரையில், அருட்தந்தை சடயாவின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார், மேலும் அருட்தந்தை ஃபீலை அன்புடன் வரவேற்றார். RVA-வின் பணியை எதிர்காலத்தில் வழிநடத்த புதிய பொது மேலாளருக்கு PREIC வாரியத்தின் முழு ஆதரவு இருக்கும் என்று அவர் உறுதியளித்தார். ஒரு அடையாளமாக, அருட்தந்தை சடயா, அருட்தந்தை ஃபீலிடம் ஒரு பெரிய தங்கமுலாம் பூசப்பட்ட அட்டை சாவியை கொடுத்து. அதை "அனைத்து கதவுகளுக்கும் சாவி" என்று குறிப்பிட்டார்.

அருட்தந்தை ஃபீல், தான் தாழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும், தனது நியமனம் ஒரு இறைவனின் விருப்பப்படியான தருணத்தில் வந்ததாகப் பகிர்ந்து கொண்டார். பல ஆண்டுகளாக அவர் தலைமையேற்று நடத்தி வந்த செபுவில் உள்ள SVD-யால் நடத்தப்படும் வேர்ட் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் தனியார் உரிமைக்கு மாற்றப்பட்ட அதே நேரத்தில்இ PREIC வாரியம் அவரை RVA-க்கு நியமிக்க தெய்வீக வார்த்தை சங்கத்தை கேட்டுக் கொண்டது. "இந்த நேரம் கடவுளின் திட்டத்தின் ஒரு பகுதி" என்று அவர் கூறினார். மேலும் அனைத்து ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்பையும் கேட்டுக் கொண்டார். மேலும் கடவுளின் ராஜ்யத்தை கட்டியெழுப்புவதற்கு எந்தப் பங்களிப்பும் சிறியதல்ல என்பதை வலியுறுத்தினார்.

அருட்தந்தை ஃபீலை நியமித்ததில்இ மனிலாவின் பேராயர் மற்றும் PREICன் தலைவர் ஜோஸ் எஃப். கார்டினல் அட்வின்குலா, மற்றும் சான் பாப்லோவின் ஆயர் மற்றும் FABC-OSC-ன் தலைவர்  ஆயர் மார்செலினோ அன்டோனியோ மாலபனன் மரலிட் ஆகியோர். கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தில், ஆசியாவில் நற்செய்தி அறிவிக்கும்RVA-வின் பணியை வழிநடத்த அவரது கல்வி, அனுபவம் மற்றும் ஆயர் ஆர்வம் ஆகியவை பொருத்தமான குணங்கள் என்று வலியுறுத்தினர். இது கிறிஸ்துவின் கட்டளையை எதிரொலிக்கிறது: "உலகம் முழுவதும் சென்று படைப்புக்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்" (மாற்கு 16:15).

சர்வதேச பங்காளர்களும் இந்த நியமனத்தை வரவேற்றனர். ரேடியோ வேரித்தாஸ்  ஆசியாவுக்கான ஜெர்மன் நன்கொடையாளர் சபை ஒரு செய்தியில், ஊடக மேலாண்மை மற்றும் சமூகத் தொடர்புகளில் அருட்தந்தை ஃபீலின் தகுதிகளைப் பாராட்டி. அவர் "RVA-க்கு ஒரு ஆசீர்வாதமாக இருப்பார்" என்று தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தினர். அருட்தந்தை ஃபீல் மற்றும் அருட்தந்தை மி ஷென் ஆகியோரின் புதிய தலைமைக்குழுவைப் பற்றி அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இது ஆசியாவில் உள்ள திருஅவையின் சேவையில் ஒரு சிக்கலான ஆனால் முக்கியமான டிஜிட்டல் ஊடகப் பணிக்கு புதிய அர்ப்பணிப்பின் அடையாளமாக இருப்பதாகக் கருதினர்.

ஒன்பது ஆண்டுகால அர்ப்பணிப்புள்ள சேவைக்காக அருட்தந்தை விக்டர் சடயாவுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், முழு RVA குடும்பமும் அருட்தந்தை ஃபீலை அன்புடன் வரவேற்கிறது. அவர் ஆசிய கிறிஸ்தவத்தின் குரலை எதிர்காலத்திற்கு வழிநடத்தும் பொறுப்பை ஏற்கிறார்.