மறுமலர்ச்சித் தியானம் - 2025 தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு முன்னெடுப்பு ! | Veritas Tamil

திருச்சி மாவட்டம் பிராட்டியூர் பொதுநிலையினர் உருவாக்க மையத்தில் நடைபெற்ற, பொதுநிலைத் திருப்பணியாளர்களுக்கான மறுமலர்ச்சித் தியானத்தில் 40 பேர் பங்கேற்றும் பங்கேற்றுப் பயன்பெற்றனர். 2 நாள்கள் நடைபெற்ற இத்தியானத்தை, திண்டுக்கல் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி, தேவராஜ் வழிநடத்தினார். தொடர்ந்து, இரண்டாம் நாள் பொதுநிலையினர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி. மரிய மைக்கேல், திருத்தந்தை லியோவின் திருமடலான "Dilext Te" அதாவது, 'நான் உன்னை அன்பு கூர்ந்தேன்' எனும் கடிதத்தை விளக்கிக் கூறியும் பொதுநிலையினரின் பணியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும், பொதுநிலைத் திருப்பணியாளர்கள் குறித்து அவர் பேசுகையில், 1962 முதல் 1965 வரை நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் திரு அவையின் பணிகளில் பல்வேறு பங்கேற்பு அமைப்புகளை முன்வைத்தது; அவற்றில் ஒன்றுதான் பொதுநிலைத் திருப்பணியாளர்கள் (Lay Ministers) என்னும் பணி எனக்கூறினார்.

 மறுமலர்ச்சித் தியானம் - 2025 தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு முன்னெடுப்பு!  திருச்சி மாவட்டம் பிராட்டியூர் பொதுநிலையினர் உருவாக்க மையத்தில் நடைபெற்ற, பொதுநிலைத் திருப்பணியாளர்களுக்கான மறுமலர்ச்சித் தியானத்தில் 40 பேர் பங்கேற்றும் பங்கேற்றுப் பயன்பெற்றனர். 2 நாள்கள் நடைபெற்ற இத்தியானத்தை, திண்டுக்கல் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி, தேவராஜ் வழிநடத்தினார். தொடர்ந்து, இரண்டாம் நாள் பொதுநிலையினர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி. மரிய மைக்கேல், திருத்தந்தை லியோவின் திருமடலான "Dilext Te" அதாவது, 'நான் உன்னை அன்பு கூர்ந்தேன்' எனும் கடிதத்தை விளக்கிக் கூறியும் பொதுநிலையினரின் பணியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும், பொதுநிலைத் திருப்பணியாளர்கள் குறித்து அவர் பேசுகையில், 1962 முதல் 1965 வரை நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் திரு அவையின் பணிகளில் பல்வேறு பங்கேற்பு அமைப்புகளை முன்வைத்தது; அவற்றில் ஒன்றுதான் பொதுநிலைத் திருப்பணியாளர்கள் (Lay Ministers) என்னும் பணி எனக்கூறினார். வத்திக்கான் பொதுச்சங்கத்தின் வரைவுகளுக்குச் செயலாக்கம் அளிக்கும் விதமாக, பொதுநிலைத் திருப்பணியாளர்கள் பயிற்சியானது. தமிழ்நாடு பொதுநிலையினர் உருவாக்க மையத்தில் 1999 முதல் 2018 வரை ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்டது எனவும், இந்த ஐந்து கட்டப் பயிற்சியிலும் முழுமையாகப் பங்கேற்ற 120 பொதுநிலைத் திருப்பணியாளர்கள் ஆயர்களால் பணிக்கு நியமிக்கப்பட்டனர் எனவும் அவர் விளக்கினார். இவர்களை ஆண்டுதோறும் வரவழைத்து ஒருநாள் மறுமலர்ச்சி தியானமும், மறுநாள் பணிப் பகிர்வும் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். பயிற்சியில் பங்கெடுத்த பொதுநிலைத் திருப்பணியாளர்கள் பலரும் தங்கள் பணிகள் குறித்துப் பகிர்கையில், ஆயர்களால் பணியமர்த்தப்பட்ட தாங்கள் முறையாகப் பங்குகளில் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை என்ற தங்கள் வருத்தத்தையும் பதிவு செய்தனர்.


வத்திக்கான் பொதுச்சங்கத்தின் வரைவுகளுக்குச் செயலாக்கம் அளிக்கும் விதமாக, பொதுநிலைத் திருப்பணியாளர்கள் பயிற்சியானது. தமிழ்நாடு பொதுநிலையினர் உருவாக்க மையத்தில் 1999 முதல்
2018 வரை ஐந்து கட்டங்களாக நடத்தப்பட்டது எனவும், இந்த ஐந்து கட்டப் பயிற்சியிலும் முழுமையாகப் பங்கேற்ற 120 பொதுநிலைத் திருப்பணியாளர்கள் ஆயர்களால் பணிக்கு நியமிக்கப்பட்டனர் எனவும் அவர் விளக்கினார். இவர்களை ஆண்டுதோறும் வரவழைத்து ஒருநாள் மறுமலர்ச்சி தியானமும், மறுநாள் பணிப் பகிர்வும் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.


பயிற்சியில் பங்கெடுத்த பொதுநிலைத் திருப்பணியாளர்கள் பலரும் தங்கள் பணிகள் குறித்துப் பகிர்கையில், ஆயர்களால் பணியமர்த்தப்பட்ட தாங்கள் முறையாகப் பங்குகளில் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை என்ற தங்கள் வருத்தத்தையும் பதிவு செய்தனர்.
 

Daily Program

Livesteam thumbnail