இதுவன்றோ நான் விரும்பும் நோன்பு | Fr. Antony Lawrence

 குருவானவர்  தவக்காலங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு வழங்குகிறார்

கோவை மறைமாவட்ட  குருவானவர் அருட்தந்தை அந்தோணி லாரன்ஸ் அவர்கள் தவக்காலத்தையொட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசு மருத்துவமனை அருகே 200க்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்.

தந்தை லாரன்ஸ் RVA விடம் கூறும்பொழுது "நான் கடவுளின் ஒரு கருவி மட்டுமே," , "நான் எந்த சிரமமும் இல்லாமல் மக்களின் உதவியுடன் கிறிஸ்துவின் பணியை நிறைவேற்றுகிறேன்."

தொடர்ந்து பேசிய அவர், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை அருகே 100 உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்க திட்டமிட்டோம், ஆனால் அது போதவில்லை. மக்களின் தேவை கருதி எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தி எதிர்காலத்தில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

சாம்பல் புதன் மற்றும் உயிர்ப்பு  ஞாயிறு இடையே உள்ள  47 நாட்கள் தவக்கால நாட்கள் முழுவதும் பசியோடு இருக்கும் ஏழைகள் அனாதைகள் கைவிடப்பட்டோர் மற்றும் மருத்துவனைக்கு வரும் நோயாளிகள் என அனைவர்க்கும் ஒரு வேலை உணவு அளிக்க வேண்டும் என்று எங்கள் பங்கில் இருந்து முடிவு எடுத்து அதனை எங்கள் பங்கின் மக்களோடு பகிர்ந்து கொண்டபோது அனைவரும் ஒரு மனதோடு ஆதரவும் முக மலர்ச்சியோடு பொருளாதார உதவிகளையும் செய்தனர். இந்த தவக்காலத்தை அர்த்தமுள்ள வகையில் அனைவரும் கொண்டாட வேண்டும் இயேசு காட்டிய வழியில் தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்குடன் என்னுடைய ஞாயிறு மறையுரையில் கூறியதை எனது மக்கள் இறை வாக்காக எடுத்து நம் பங்கில் அனைவரும் இணைந்து செய்வோம் உங்களுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறி ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த இலவச உணவு திட்டத்திற்கு அருள்தந்தை லாரன்ஸ் தனது பங்குமக்களால்  ஆழ்ந்த உத்வேகமும் ஊக்கமும் பெற்றார், அவருடைய  பணிக்கு நிதி ரீதியாகவும் உடல் உழைப்பு ரீதியாகவும் ஆதரவளித்து வருகின்றனர்.
மேலும் அருள்தந்தந்தை அவர்கள் பலவித பணிகளை ஆற்றி வருகின்றார், சாலை ஓரங்களில் இருக்கும் ஆதரவற்றோர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும், இளைஞர்கள் மற்றும் அங்கு மக்களின் உதவியோடு அவர்களை பலவித இல்லங்களில் சேர்க்கவும், மறுவாழ்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

அவருடைய பங்கில் உள்ள   கிளமென்ட் பிரேம் குமார், இந்தப் பணியானது எங்கள் பங்கு ஆலயம்  மேற்கொள்ளும் இந்த பணிகள் ஒரு சாட்சிப் பணி என்றும், எங்களின் கடந்த கால பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய முயற்சித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

மற்றொரு பங்கு உறுப்பினரான  ஆண்டனி பிரேம் கருத்துப்படி,  உணவைப் பெற்ற பிறகு பசியுடன் இருந்த முகத்தைப் பார்த்தபோது நான் மகிழ்ச்சியான உணர்வை உணர்ந்தேன், மேலும் துன்பப்படுபவர்களில் கிறிஸ்துவைக் காண்பது உண்மையான உண்மையான வழியாகும்" என்று அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

கோயம்புத்தூர் மறைமாவட்டத்தில் , கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் 400 கத்தோலிக்கக் குடும்பங்களுக்கு சேவை செய்கிறார் மேலும் அந்த பங்கின் பங்குதந்தையாகவும் அருள்தந்தை லாரன்ஸ் அவர்கள் பணியாற்றி வருகிறார்.

 -அருள்பணி வி.ஜான்சன்