'திருமணம் என்பது பிரிக்க முடியாத பந்தம்' | Veritas Tamil
'திருமணம் என்பது பிரிக்க முடியாத பந்தம்'
ஒரு சதை (Una caro) எனும் ஆவணத்தை வெளியிட்ட வத்திக்கான்!
வத்திக்கான், நவ 26: திருமணத்தின் முக்கியத்துவத்தையும், கணவன் - மனைவி இடையே உள்ள புனிதமான பந்தம் குறித்தும் விளக்கும் வகையில் "ஒரு சதை" (Una caro-உனா காரோ) என்ற ஆவணம் வத்திக்கானில் இத்தாலிய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் திருமண பந்தம் என்பது இருமணங்களைக் கடந்து வேறு திசை நோக்கிச் செல்லத் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் ஒரு காரணம் என "உனா காரோ" ஆவணம் குறிப்பிடுகிறது. மேலும், திருமணத்தில் இணையும் இருவர் உடல் மற்றும் மன ரீதியாக ஓர் உடல் சதையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அந்த ஆவணம், உணர்வுப்பூர்வமான அனைத்துச் சூழ்நிலைகளிலும் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
திருமணம் இருவருக்கும் இடையேயான வரம்பு அதைக்கடந்த எதையும் திரு அவை அனுமதிக்காது எனவும், இந்தக் கோட்பாடுகளின் கீழ், கிறித்தவ நம்பிக்கையின் கீழ் தம்பதியினர் குழந்தைகளைப் பெற்று வளர்க்க வேண்டிய பொறுப்புடையவர்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்க்கைத் துணைவரின் தனித்துவமான நட்பு, பரஸ்பர அறிவு, ஒருவர் மற்றொருவரைப் பாராட்டுதல்,
துணையாக இருத்தல், நெருக்கம், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுதல் மற்றும் பொறுமை ஆகியவற்றுடன், ஒருவர் மற்றவரின் நன்மைக்கான அக்கறை மற்றும் உணர்திறன் சைகைகள் ஆகியவற்றால் இந்தத் திருமண பந்தம் வலுப்பெறுகிறது என அந்த ஆவணம் கூறுகிறது.
இருவருக்கும் இடையே காதல்வேண்டும் அதே நேரம் அது பாலியல் தேடலுக்காக மட்டுமல்லாமல் அதையும் தழுவி மிக ஆழமான அன்பை வெளிப்படுத்தும் உறவாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.