ஓடை தூய்மை செய்தல் | Veritas Tamil
பசுமை பயணத்தைத் தொடர்ந்து - ஓடை தூய்மை செய்தல் பணி
28/11/2025 அன்று திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் அடைக்கல அன்னை இல்லத்தில் உள்ள இரண்டு அருட் சகோதரிகளை மையமாகக் கொண்டு இப்பணியானது தமிழ்நாடு AICUF - ன் மாநில ஆலோசகர் அருட்தந்தை பார்த்தசாரதி முன்னிலையில் , தமிழ்நாடு AICUF மாநில ஊக்குநர் தோழர் ரஞ்சித் ராய் அவர்கள் மற்றும் தமிழ்நாடு AICUF முழு நேர பணியாளர் தோழர் வின்சி மற்றும் பசுமைப் பயண வீரர்கள் 10 நபர்கள் இப்பணியில் கலந்து கொண்டார்கள்.
ஓடையை தூய்மை செய்தல் பணியானது சரியாக காலை 10 மணியளவில் இந்த ஊரில் உள்ள முக்கிய நபர்களால் மற்றும் பான் செக்கர்ஸ் திண்டுக்கல் மாநில தலைவி அருட் சகோதரி பவுலின் மேரி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. சரியாக 10:30 மணியளவில் சிறிய சிறிய கருவிகளை கொண்டும் மற்றும் JCB உதவியுடன் ஓடையை தூய்மை செய்ய ஆரம்பித்தார்கள்.
ஓடையை தூய்மை செய்யும் பணியின் 2 ஆம் நாள்
29/11/2025, இரண்டாம் நாள் காலை 7:00 மணி அளவில் பசுமை பயண வீரர்கள் அனைவரும் தியானத்தில் ஈடுபட்டனர் . இதன் பின்னர் காலை உணவை உண்டனர். சரியாக காலை 9:00 மணி அளவில் அங்குள்ள நெல்லி கனி தோப்பினை தூய்மை செய்தார்கள். 11:00 மணி அளவில் தேனீர் இடைவேளை.இதன் பிறகு சரியாக 2:00 மணி அளவில் வேலை நிறைவுற்றது.
ஓடையை தூய்மை செய்த பணி மூன்றாம் நாள்
30/11/2025 , மூன்றாம் நாள் காலை 7:00 மணியளவில் பசுமை பயண வீரர்கள் அனைவரும் தியானத்தில் ஈடுபட்டார்கள். இதன் பின்னர் காலை உணவானது உன்னப்பட்டது. சரியாக காலை 9:30 மணியளவில் அங்குள்ள தென்னை தோப்பு பகுதிகளை தூய்மை செய்ய தொடங்கினார்கள். 11:30 மணி அளவில் தேனீர் இடைவேளை. இடைவேளையை தொடர்ந்து தென்னை தோப்பு பகுதிகளை தூய்மை செய்ய தொடங்கினார்கள். சரியாக 2:00 மணியளவில் வேலையை நிறைவு செய்தார்கள். இதன் பிறகு மதிய உணவானது உண்ணப்பட்டது.
3:00 மணி அளவில் அருட்தந்தை பார்த்தசாரதி அவர்கள் அங்குள்ள அருட்சகோதரிகள் இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றினார். சரியாக 4:00 மணியளவில் பசுமை பயண வீரர்கள் அனைவரும் சக்தி கலைக்குழுவை நோக்கி புறப்பட்டார்கள். அங்கு சென்று அங்குள்ள அருட்சகோதரிகள் மற்றும் பயிலக்கூடிய சகோதரிகள் அனைவரையும் சந்தித்து அவர்களிடம் தங்களது பசுமை பயண அனுபவத்தை பகிர்ந்து மகிழ்ந்தார்கள். அங்கு இரவு உணவானது வழங்கப்பட்டது. உணவினை உண்டபின் பசுமை பயண வீரர்கள் அனைவரும் அவரவர் இல்லத்தை நோக்கி புறப்பட்டார்கள். சிறப்பாக இனிதே மூன்றாம் நாள் நிறைவடைந்தது.