may2022

  • உலக செரிமான சுகாதார நாள் | May 29

    May 29, 2022
    ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29 ஆம் தேதி உலக காஸ்ட்ரோஎன்டாலஜி அமைப்பும் (World Gastroenterology Organisation - WGO), அறக்கட்டளையும் (WGO Foundation -WGOF) இணைந்து, உலக செரிமான சுகாதார நாளைக் (World Digestive Health Day - WDHD) கொண்டாடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட செரிமான நோய் மற்றும் அல்லது கோளாறு குறித்து கவனம் செலுத்துகிறது. இது நோய் மற்றும் கோளாறு பற்றிய தடுப்பு, பரவல், நோயறிதல், மேலாண்மை மற்றும் சிகிச்சை குறித்த பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் என்பதே இதன் நோக்கம்.
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நாள் | May 13

    May 13, 2022
    சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி அல்லது ஐசிசிடி) என்பது நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அரசுகளுக்கிடையேயான அமைப்பு மற்றும் சர்வதேச தீர்ப்பாயம் ஆகும். இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக் குற்றங்களுக்காக தனிநபர்களை விசாரிக்கும் அதிகார வரம்பைக் கொண்ட முதல் மற்றும் ஒரே நிரந்தர சர்வதேச நீதிமன்றம் ஐஊஊ ஆகும்.
  • உயிர்காக்கும் தேவதைகள் - செவிலியர்கள் என்ற பெயரில்!

    May 12, 2022
    நோயாளியைத் தொடர்ந்து கவனித்து, நோயின் தாக்கத்தையும் போக்கையும் அக்கறையுடன் கவனித்து, அவ்வப்போது கருவிகளைக் கொண்டு சோதனை செய்து, குறிப்புகளைக் குறித்து வைத்து, சரியான காலத்தில் மருந்து மாத்திரைகளைத் தந்து, தகுந்த ஆலோசனைகளைத் தந்து என சுழன்று சுழன்று வேலை செய்யும் செவிலியர்கள் போற்றுதலுக்குரியவர்கள். தூய வெண்ணிற ஆடை மட்டுமல்ல, அன்பும், பொறுமையும் சகிப்புத்தன்மையும் செவிலியர்களின் அடையாளங்கள்.
  • சர்வதேச உணவுக் கட்டுப்பாடு நாள் | May 6

    May 06, 2022
    மே 6 அன்று சர்வதேச உணவுக் கட்டுப்பாடு நாள் கொண்டாடப்படுகிறது. நம்முடைய உடலின் அமைப்பினை நாம் அன்புசெய்ய, ஏற்றுக்கொள்வதற்காக இந்த நாள்; கொண்டாடப்படுகிறது. நம்முடைய உடல் பருமன் எவ்வாறு இருந்தாலும், நல்ல ஆரோக்கியமான உணவுமுறையை மட்டும் நாம் பின்பற்றவேண்டும். அதற்காக உணவுக் குறைப்பில் ஈடுபடக்கூடாது. உடல் பருமன் என்பது உணவுப் பழக்கத்தால் மட்டும் வருவதல்ல, குறைந்த சுயமரியாதை, கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் வருகிறது. எனவே உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் உணவு டயட் முறையைப் பின்பற்றினால், நாம் மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு அதிகமான உடல் பருமன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற விழிப்புணர்வை இந்நாள் வலியுறுத்துகிறது.
  • சர்வதேச மருத்துவச்சிகள் நாள் | May 5

    May 05, 2022
    ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச்சி தினம் மே 5 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர் தாய்-சேய் செவிலி பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணிபுரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நாள் | may 4

    May 04, 2022
    நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்புப் பற்றி எடுத்துக் காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 4 ஆம் தேதியன்று நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் நாள் அனுசரிக்கப்படுகின்றது.
  • சர்வதேச சூரியன் நாள் | May 3

    May 03, 2022
    மே 3 ஆம் தேதி சர்வதேச சூரியன் நாள் கொண்டாடப்படுகிறது. சூரிய சக்தியின் ஒரு பகுதியைப் பயன்படுத்துவதன் மூலம், கிரகத்தின் ஆற்றல் சமநிலையை பாதிக்காது. எனவே, சூரிய சக்தி என்பது சுற்றுச்சூழல் நட்பு ஆதாரங்களில் ஒன்றாகும். சுற்றுச்சூழலை விசமாக்கும் எரிபொருளைப் பிரித்தெடுத்தல் மற்றும் எரிப்பதைத் தவிர்க்க இது அனுமதிக்கிறது.