உயிர்காக்கும் தேவதைகள் - செவிலியர்கள் என்ற பெயரில்!
நோயாளியைத் தொடர்ந்து கவனித்து, நோயின் தாக்கத்தையும் போக்கையும் அக்கறையுடன் கவனித்து, அவ்வப்போது கருவிகளைக் கொண்டு சோதனை செய்து, குறிப்புகளைக் குறித்து வைத்து, சரியான காலத்தில் மருந்து மாத்திரைகளைத் தந்து, தகுந்த ஆலோசனைகளைத் தந்து என சுழன்று சுழன்று வேலை செய்யும் செவிலியர்கள் போற்றுதலுக்குரியவர்கள். தூய வெண்ணிற ஆடை மட்டுமல்ல, அன்பும், பொறுமையும் சகிப்புத்தன்மையும் செவிலியர்களின் அடையாளங்கள்.
உலகின் தலை சிறந்த செவிலியரும், செவிலியர் பணியை முன்னிறுத்தி முறைமைப்படுத்தியவருமான கை விளக்கேந்திய காரிகை புளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளாகிய மே 12 ஆம் தேதியை உலக செவிலியர் அமைப்பு (வுhந ஐவெநசயெவழையெட ஊழரnஉடை ழக ரேசளநள), சர்வதேச செவிலியர் நாளாக 1974 ஆம் ஆண்டு அறிவித்தது.
புளாரன்ஸ் நைட்டிங்கேல் 1820 ஆம் ஆண்டு புளாரன்ஸ் என்ற இடத்தில் பிறந்தார். செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தாலும், அர்ப்பணிப்பு உணர்வுடன், செவிலியர் பணியைத் தாமே விரும்பியேற்றார். செவிலியருக்கான முதல் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கியவர் இவரே.
1854 ஆம் ஆண்டில், கிரிமியன் போரில் காயமுற்ற வீரர்களுக்குச் சிறந்த முதலுதவி, மருத்துவ சிகிச்சை வழங்கினார். அவருடன் மேலும் 38 செவிலியரையும் அப்பணியில் ஈடுபடுத்தினார். இரவு நேரங்களில், கைகளில் விளக்குடன் வந்து, வீரர்களுக்குச் சேவை செய்த வீரச் செவிலித் தாயை அனைவரும் கை விளக்கேந்திய காரிகை (வுhந டுயனல றiவா வாந டுயஅp) என அழைத்தனர். அவரது 200 வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், 2020 ஆம் ஆண்டை சர்வதேச செவிலியர் ஆண்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.