மே 6 அன்று சர்வதேச உணவுக் கட்டுப்பாடு நாள் கொண்டாடப்படுகிறது. நம்முடைய உடலின் அமைப்பினை நாம் அன்புசெய்ய, ஏற்றுக்கொள்வதற்காக இந்த நாள்; கொண்டாடப்படுகிறது. நம்முடைய உடல் பருமன் எவ்வாறு இருந்தாலும், நல்ல ஆரோக்கியமான உணவுமுறையை மட்டும் நாம் பின்பற்றவேண்டும். அதற்காக உணவுக் குறைப்பில் ஈடுபடக்கூடாது. உடல் பருமன் என்பது உணவுப் பழக்கத்தால் மட்டும் வருவதல்ல, குறைந்த சுயமரியாதை, கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் வருகிறது. எனவே உடல் பருமனைக் குறைப்பதற்காக நாம் உணவு டயட் முறையைப் பின்பற்றினால், நாம் மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு அதிகமான உடல் பருமன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற விழிப்புணர்வை இந்நாள் வலியுறுத்துகிறது.