தொடர்ந்த்து நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார். பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்கிறார். உடனே இயேசு, “இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தனது பாடுகளையும் உயிர்ப்பையும் முன்னறிவிக்கின்றார்.
‘பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் (குழப்பம்) கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்’
1. வஞ்சனையும் பொய்யும் அவரை விட்டு அகலச் செய்ய வேண்டும்.
2. அவருக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; அவருக்கு தேவையான உணவை மட்டும் தந்தால் போதும் என்கிறார்.
நிறைவாக, ஓர் ஏழை உதவிக்குக் கூவி அ.ஐக்கும்போது, யார் ஒருவரு தமது காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் ஒருநேரத்தில் உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார் என்ற ஆழந்த போதனையும் இவ்வாசகத்தில் வலியுறுத்தப்படுகிறது.
மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் இயேசு மிகச் சிறந்த போதகராக இருக்கின்றார். இயேசுவின் மலைப்பொழிவு என்னும் நீண்ட போதனையும், மற்ற நான்கு போதனைகளும் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கின்றன.
கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களில் சிலர் இயேசுவின் உயிர்ப்பை ஏற்கவில்லை. அவர்களை இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை வைக்க வலியுறுத்துகிறார் பவுல். இயேசுவின் மரணமும் உயிர்ப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றதாகும்.
அவரை அழைத்த பரிசேயர் “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். அதை அறிந்த இயேசு, அவருக்குச் சவால் விடுகிறார்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது ஒரு சிறந்த பழமொழி. எல்லாரிடத்திலும் குறைகள் உண்டு. நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகளிடமும் குற்றம் இருக்கும். குற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் உறவோ, நட்போ நீடிக்காது. தனி மரம் தோப்பாவதில்லை. தனித்து வாழ்வதால் நம் இன்பத்துன்பங்களில் யாரும் பங்குகொள்ளப் போவதில்லை.
ஆண்டவர் இயேசு அந்த கைம்பெண்ணின் மகனுக்கு உயிரளித்தது கண்டு அங்கிருந்த மக்கள், “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார் என்று பேசத் தொடங்கியதோடு, கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லி கடவுளைப் போற்றினர்.