ஏமாற்றத்தை தரும் எதிர்பார்ப்புக்களை களைவோம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து எதையாவது எதிர்பார்த்தும், மற்றவர்களை சார்ந்தும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது மகிழ்ச்சிக்காக சிலவற்றை எதிர்பார்க்கின்றோம். நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கின்றபோது உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அந்த மகிழ்ச்சி தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அதன்மூலம் கிடைக்கும் பெருமைக்காகவும் எல்லையில்லா எதிர்ப்பார்ப்புகளை உள்ளத்திலே தாங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது தான் உண்மைஇன்னும் சொல்லப் போனால் நமது சுமை தீரவும், குறையவும் சிலவற்றை எதிர்ப்பார்க்கின்றோம். நாம் எண்ணியதைச் செய்து முடிக்க முடியாதபோது, அதனை மற்றவர்கள்வழியாகவும், நண்பர்கள் வழியாகவும் பூர்த்தி செய்து கொள்ளும் போதும் நமது உள்ளத்தின் சுமைகள் குறையும் என்பதனாலும் பலவிதமான எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்பார்ப்புக்கள் வைக்கக் கூடாது என்று சொல்லவில்லை. சில எதிர்பார்ப்புக்கள் நம் வாழ்வில் ஏமாற்றத்தை தரும் என்பதை புரிந்து கொள்வோம்.

பெற்றோர்கள் பிள்ளைகள் வாழ்வில் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சிலவற்றை எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர்கள் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது ஏமாற்றம்தானே விளைகிறது? எனவே யாரும் யாரையும் எதிர்பார்த்து வாழ்வதை தவிர்ப்போம். நமது வாழ்க்கையை நாமாகவே அனுபவித்து வாழ நம்மை பயிற்றுவிப்போம். அதுதான் அர்த்தமுள்ள வாழ்வுக்கான சிறந்த வழி. இதனையே புரூஸ் லீநான் உன்னுடைய எதிர்ப்பார்ப்பின்டி வாழ இந்த உலகில் இல்லை, நீயும் என்னுடைய எதிர்ப்பார்ப்பின்படி வாழ இந்த உலகில் இல்லை. மற்றவர்களுக்காக வாழும்பொழுது எதிர்பார்க்கின்ற விளைவுகள் ஏற்படாமல் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உண்டு." என்கிறார். மகிழ்ச்சியாக வாழ்வில் இருக்க இரண்டு வழிகளை கூறுகின்றார் ஜோடி பைக்கால்ட், “உன்னுடைய உண்மையான திறமைகளை வளர்த்துக்கொள். அல்லது உனது எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்". எனவே நாமும் நம் வாழ்வில் எதிர்பார்ப்புக்களை குறைத்துக் கொண்டு உண்மையான திறமைகளை வளர்த்துக் கொள்வோம்.

நம் வாழ்வில் எதிர்பார்ப்புக்களை குறைத்துக் கொண்டு உண்மையான திறமைகளை வளர்த்துக் கொள்வோம்.