நூற்றுவர் தலைவர் இயேசு அங்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் குணப்படுத்த வருமாறு வேண்டினார். ஊர் மக்களும் அவருக்காக இயேசுவிடம் பரிந்து பேசினர்.
நம்மிடம் அன்பாக இருப்பவர்களுடன் கூடி குலாவுவது எளிது. ஆனால் அதே அன்பை வேண்டாதவர் மீதும் செலுத்த வேண்டும் என்பதுதான் நமக்கான சவால். அனைவரும் மீட்கப்பட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பதால், இயேசுவின் படிப்பினையை ஏற்பதன் வழியே நமது பகைவரையும் மீட்பரிடம் கொண்டுவர முடியும்.
நாம் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்றால் வித்தியாசமான வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பது பொருள். ஆகவே, வித்தியாசமான இவ்வுலகில் வித்தியாசமான வாழ்வு வாழ நாம் பணிக்கப்படுகிறோம். பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்ற வாழ்வு நமதல்ல.