'அன்னை மரியா போன்று நாமும் கடவுளிடம் 'ஆம்' என்று சொல்லுவோம்'!| Veritas Tamil

மரியாவின் அமல உற்பவப் பெருவிழா அன்று வத்திக்கானில் நம்பிக்கையாளர்களைச் சந்தித்த திருத்தந்தை லியோ, மரியாவைப் போல நாமும் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளவும், கிறிஸ்துவை நமது வாழ்க்கையில் வரவேற்கவும் நாம் தொடர்ந்து முயலவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அன்னையைப் போலவே "கடவுள் நம்மை அழைக்கும் பணிக்கு, நாம் நமது முழுமையான ஒப்புதலை வழங்கவேண்டும் என்றும், மரியாவின் 'ஆம்' சிறப்புமிக்கது; ஒவ்வொரு நாளும் உண்மையில் நாம் புதுப்பிக்கப்படுவதுடன், நன்றியுணர்வு, பணிவு மற்றும் விடாமுயற்சியுடனும்
இறைவேண்டலிலும் உறுதியான அன்பின் செயல்களிலும் அந்த "ஆம்" நமதாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, மிகவும் அசாதாரண செயல்கள் முதலில் மிகவும் சாதாரணமானவையாகவும், சாதாரண முயற்சிகளாகவும். அன்புச் செயல்களாகவும் மாறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வழிமுறைகளில் கிறிஸ்துவை அனைத்து இடங்களிலும் அறிவிக்கவும் வரவேற்கவும் நேசிக்கவும் அனைவருக்கும் வாய்ப்பாக அமைகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துவின் வருகையின் வாயிலாக, கன்னி மரியாவுக்கு "முற்றிலும் தூய இதயத்தின் சிறப்பு அருளை" கடவுள் அவருக்கு வழங்கியுள்ளார். ஆகவேதான் நம்பிக்கையுடன் அவர் 'ஆம்' என்று பதிலளித்தார்: 'இதோ, நான் கடவுளின் அடிமை; உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும்" என்று பதிலளித்துள்ளார்.

மசியாவும் 'அவருடைய சுதந்திரத்தில், அதை அவர் வரவேற்று, கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். கடவுள் எப்போதும் இவ்வாறு செயல்படுகிறார், அவர் நமக்கு பெரிய கொடைகளைத் தருகிறார், ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ளவோ தவிர்க்கவோ அவர் நம்மைச் சுதந்திரமாக விட்டுவிடுகிறார்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.