வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்; ‘எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை’ ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.
ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார் - திருப்பாடல்கள் 55:22. நம் கவலைகளை முற்றிலும் ஆண்டவர் பாதத்தில் ஒப்படைத்திடவேண்டும். பிறகு அதை பற்றி நினைத்து கொண்டு இருக்க கூடாது. அவர் தன் பிள்ளைகள் அழிவை காண விடமாட்டார்.
இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக
உயிர்பின் ஞாயிறு. ஒரு உறவின் ஞாயிறு. வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார் - யோவான் 20:1